18 வருஷம் 0 கோப்பை.. இதான் மரியாதை .. பின்னால் நிற்கும் கோலியே ஆர்சிபி கேப்டனா வந்துருக்கலாம்.. கைப் பேட்டி

Mohammed Kaif
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய புதிய கேப்டனாக ரஜத் படிதார் செயல்படுவார் என்று அறிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் அவர் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் 2024 – 25 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் மத்திய பிரதேசத்தை கேப்டனாக ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார்.

அதன் காரணமாக அவரை பெங்களூரு அணி புதிய கேப்டனாக அறிவித்துள்ளது என்றே சொல்லலாம். அதனால் விராட் கோலி மீண்டும் கேப்டனாக வருவார் என்று எதிர்பார்த்த பெங்களூரு ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் விராட் கோலி மீண்டும் பெங்களூரு அணியின் வராதது தமக்கு ஆச்சரியமும் ஏமாற்றத்தையும் கொடுத்ததாக முகமது கைப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கைப் ஏமாற்றம்:

இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு விராட் கோலி தான் ரஜத் படிதாரை புதிய கேப்டனாக பரிந்துரை செய்திருக்கலாம் என்றும் ஃகைப் கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் கொஞ்சம் ஆச்சரியமடைந்தேன். டு பிளேஸிஸை அவர்கள் தக்க வைக்காததால் விராட் கோலி மீண்டும் பெங்களூரு அணியை வழி நடத்துவார் என்று நினைத்தேன்”

“விராட் கோலி தான் ஆர்சிபி அணியை நடத்துகிறார் என்று நான் நினைத்தேன். கேப்டனாக இல்லையென்றாலும் குறிப்பிட்ட வீரர்களை வாங்குவதற்கான பரிந்துரைகளை அணி நிர்வாகத்திற்கு கொடுப்பது அவருடைய வேலை. எனவே ரஜத் கேப்டனாக வந்ததன் பின்புலத்தில் விராட் கோலி இருப்பார். பெங்களூரு அணி 18 வருடங்களாக கோப்பையை வெல்லவில்லை. ஆனாலும் அவர்கள் விராட் கோலியை இன்னும் தங்கள் அணியிலேயே வைத்துள்ளார்கள்”

- Advertisement -

பின்னணியில் கோலி:

“அதுவே விராட் கோலி மீது பெங்களூரு அணி காட்டும் மரியாதையாகும். அதுவே பெங்களூரு அணியில் விராட் கோலியின் பிராண்ட் ஆகும். 37 வயதாகும் விராட் கோலி தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தி இளம் வீரர் அணியை வழி நடத்துவதை விரும்புகிறார். ஆனால் இந்த பொறுப்பு படிதாருக்கு கடினமாக இருக்கும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல்: 2 விக்கெட்ஸ்.. இது அவுட்டில்லையா? போராடி மும்பையை சாய்த்த டெல்லி.. சாதனை வெற்றி

முன்னதாக 2013 – 2021 வரையிலான காலகட்டங்களில் விராட் கோலி பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தார். அந்த காலகட்டங்களில் 2016இல் ஃபைனல் வரை சென்ற பெங்களூரு மற்ற சீசன்களில் சுமாராகவே விளையாடியது. அதனால் விராட் கோலி இருக்கும் வரை பெங்களூரு கோப்பையை வெல்ல முடியாது என்று விமர்சனங்கள் வந்ததால் அவர் அந்த பொறுப்பை துறந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement