மகளிர் ஐபிஎல்: 2 விக்கெட்ஸ்.. இது அவுட்டில்லையா? போராடி மும்பையை சாய்த்த டெல்லி.. சாதனை வெற்றி

DC vs MI
- Advertisement -

மகளிர் ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 15ஆம் தேதி வதோதராவில் முன்னாள் சாம்பியன் மும்பையை டெல்லி அணி எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது.

யஸ்டிக்கா பாட்டியா 11, ஹேய்லே மேத்தியூஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் கேப்டன் ஹர்மன்பிரீத் அதிரடியாக விளையாடி 42 (22) ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய நட் ஸ்கீவர் 13 பவுண்டரியுடன் அபாரமாக விளையாடி 80* (59) ரன்கள் குவித்தார். ஆனால் எதிர்ப்புறம் எமிலியா 9, சஜனா 1, அமன்ஜோத் கௌர் 7 என மற்ற வீராங்கனைகள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

மும்பை தடுமாற்றம்:

டெல்லிக்கு அதிகபட்சமாக அனபெல் சதர்லாந்து 3, சீக்கா பாண்டே 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 165 ரன்களை துரத்திய டெல்லிக்கு 7 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்க விட்ட சபாலி வர்மா 43 (18) ரன்கள் விளாசி அபாரமான துவக்கத்தை கொடுத்து ஃபெவிலியன் திரும்பினார். ஆனால் அவருடன் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் மெக் லென்னிங் 15 (19) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

அடுத்ததாக வந்த ஜெமிமா 2, அனபெல் 13, அலிஸ் கேப்சி 16 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் இளம் வீராங்கனை நிக்கி பிரசாத் நிதானமாக விளையாடினார். எதிர்ப்புறம் மிரட்டலாக விளையாடிய சாரா பிரைஸ் 21 (10) ரன்களும் சிகா பாண்டே 2 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அதனால் கடைசி ஓவரில் டெல்லிக்கு 10 ரங்கள் தேவைப்பட்ட போது முதல் 3 பந்துகளில் 4, 2, 1 ரன்கள் எடுத்த நிக்கி 5வது பந்தில் 35 (33) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இது அவுட்டில்லையா:

கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது அருந்ததி ரெட்டி நேர்த்தியாக செயல்பட்டு டைவ் அடித்து டபுள் எடுத்தார். இருப்பினும் டைவ் அடிக்கையில் பேட் வெள்ளைக்கோட்டில் முழுமையாக தொடவில்லை. அப்போது பெய்ல்ஸ் நீக்கப்பட்டதால் இது அவுட்டில்லையா? என்று மூன்றாவது நடுவரை மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். மொத்தத்தில் 20 ஓவரில் 165-8 ரன்கள் எடுத்த டெல்லி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: 4 வருசமா தோத்துட்டு இந்தியாவை குறைத்து பேசி காமெடியா பண்றிங்க.. டக்கெட்டை விளாசிய அஸ்வின்

அதன் வாயிலாக மகளிர் ஐபிஎல் தொடரில் சேசிங்கில் குறைந்த விக்கெட் (2) வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாக டெல்லி சாதனை படைத்தது. இதற்கு முன் யூபி வாரியர்ஸ் 2 முறை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை. மும்பைக்கு அதிகபட்சமாக ஹைய்லே மேத்யூஸ், எமிலியா கெர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement