
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கியது. 3 போட்டிகளின் முடிவில் என்ற 2 – 1* கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.
அதன் காரணமாக 4வது போட்டியில் இந்திய அணி 3 மாற்றங்களை செய்தது. அதில் ஒன்றாக கருண் நாயர் நீக்கப்பட்டு தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டது கலவையான கருத்துக்களை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் 2016 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகமான அவர் சென்னையில் சேவாக்கிற்கு பின் இந்தியாவுக்காக முச்சதம் அடித்த சாதனை படைத்தார்.
இருப்பினும் அதன் பின் பெரிய ரன்கள் குவிக்தத் தவறியதால் கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூரில் கடுமையாக போராடி 8 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்தார். ஆனால் அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார். அதனால் சுதர்சனை அறிமுகப் போட்டியுடன் கழற்றி விட்ட இந்திய அணி அவருக்கு 3வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தது.
ஆனால் அந்த வாய்ப்பிலும் அரை சதம் கூட அடிக்காத கருண் நாயர் 3வது போட்டியில் பந்தை தவறாக படித்து விக்கெட்டை இழந்தது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. எனவே 4வது போட்டியில் அவரை கழற்றி விட்டுள்ள இந்திய அணி மீண்டும் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்நிலையில் கருண் நாயருக்கு இன்னும் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
அதை செய்யாத கேப்டன் சுப்மன் கில் 8 வருடம் கழித்து கம்பேக் கொடுத்த வீரருக்கு மறுவாழ்வை போன்ற ஆதரவைக் கொடுத்து மரியாதையை சம்பாதிக்கவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் கைப் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இன்று சுப்மன் கில்லுக்கு, கருண் நாயரை ஆதரித்து இன்னும் ஒரு தகுதியான வாய்ப்பைக் கொடுப்பதற்கான வாய்ப்பு இருந்தது”
இதையும் படிங்க: 1990 சஞ்சய் மஞ்ரேக்கருக்கு பின்.. 35 வருடம் கழித்து மான்செஸ்டரில் சாதித்த சுதர்சன்.. புஜாராவின் இடத்தில் அபாரம்
“இன்று அவர் கருண் நாயரை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு கேப்டனாக கடுமையான முடிவுகளை எடுக்கும் போது மரியாதை சம்பாதிக்கும் வாய்ப்பை அவர் தவற விட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும் சுதர்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது வருங்காலத்திற்கான பாதையையும் நன்றாக அமைக்கும் என்று ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.