உங்கள நம்ப முடியல.. ஒழுங்கா டாஸ் போடும் போது அதை கேமராவில் காட்டுங்க.. ஹபீஸ் புதிய விமர்சனம்

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தி வரும் 2023 உலகக் கோப்பை இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதில் 24 லீக் போட்டிகளின் முடிவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த மண்ணில் தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பற்றி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

அதே போல தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் அணிகளும் அசத்தி வரும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 5 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்து திணறி வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 8வது முறையாக உலகக்கோப்பையில் தோற்ற பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோற்று அவமானத்தை சந்தித்தது.

- Advertisement -

கேமராவில் காட்டுங்க:
ஆனால் தோல்விகளுக்கான காரணம் இந்தியா தான் என்று அந்நாட்டை சேர்ந்தவர்கள் பேசி வருவது வாடிக்கையாகி வருகிறது. முதலில் இந்தியாவில் இருக்கும் மைதானங்களின் பவுண்டரி அளவுகள் மிகவும் சிறியதாக இருப்பதே தங்களுடைய பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம் என்று இமாம்-உல்-ஹக் ஆகியோர் தெரிவித்தார்.

அதை விட தில்தில் பாகிஸ்தான் உத்வேக பாடலை அகமதாபாத் மைதான டிஜே ஒலிபரப்பாததே இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கான காரணம் என்று தெரிவித்து மிக்கி ஆர்த்தர் இதற்கு ஃபைனலில் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார். மறுபுறம் தர்மசாலா மைதானத்தில் வெளிப்புற ஆடுகளங்கள் வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் விமர்சித்திருந்தார்.

- Advertisement -

அதை விட பாகிஸ்தான் செமி ஃபைனல் வரக்கூடாது என்பதற்காகவே இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய சொல்லலுக்கு சாதகமான சென்னை பிட்ச் சேமிக்கப்பட்டு வைத்திருந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில் டாஸ் வீசிய பின் பூ அல்லது தலை விழுவதை போட்டியின் நடுவர் மட்டும் பார்க்காமல் ரசிகர்கள் உட்பட அனைவரும் பார்க்கும் வகையில் ஸ்பைடர் கேமராவில் காட்ட வேண்டும் என்று ஹபீஸ் மீண்டும் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு.

Mohammed Hafeez Tweet

“2012 உலக கோப்பையில் நான் பாகிஸ்தானின் கேப்டனாக இருந்த போது ஐசிசி தொடரின் இயக்குனரிடம் டாஸ் விழும் போது அதன் முடிவை ஸ்பைடர் கேமராவில் அனைவரிடமும் தெளிவாக காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஏனெனில் நாணயம் 5 – 10 மீட்டர் செல்லும் போது கேப்டன்கள் அங்கேயே இருப்பார்கள். நடுவர் மட்டுமே முடிவை பார்ப்பார். நான் யாரையும் சந்தேகப்படவில்லை. ஆனால் டாஸ் முடிவை ரசிகர்களும் உலகமும் தெளிவாக பார்க்க வேண்டும். அது பூவாக அல்லது தலையாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஸ்பைடர் கேமராவில் அனைவரும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement