விராட் கோலி எப்போதாங்க பார்முக்கு திரும்புவார் – ரசிகர்களின் ஏக்கதுக்கு ஏற்ற பதிலளித்த முன்னாள் இந்திய கேப்டன்

kohli
Advertisement

நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலி கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியின் பேட்டிங் துறையில் முக்கிய முதுகெலும்பு வீரராக உருவெடுக்கும் அளவுக்கு தனது அபார திறமையால் உலகின் அனைத்து இடங்களிலும் எதிரணி பந்துவீச்சாளர்களை பந்தாடி ரன் மழை பொழிந்து பல வெற்றிகளை தேடி கொடுத்தார். சச்சினுக்கு பின் இந்தியாவின் ரன் மெஷினாகக மாறிய இவர் 31 வயதிலேயே 70 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த 3-வது பேட்ஸ்மேனாக சாதனை படைத்து சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.

Kohli-2

ஆனால் அதன்பின் பள்ளத்தாக்கை போல மிகப்பெரிய சரிவை சந்தித்த அவர் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் மோசமான பார்மில் திணறி வருகிறார். கடைசியாக கடந்த 2019இல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது சதமடித்த அவர் 2017 – 2021 வரை இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் செய்த கேப்டன்ஷிப் பொறுப்பு தமது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் அந்த பதவிகளிலிருந்து படிப்படியாக விலகினார்.

- Advertisement -

எப்போதான் பார்முக்கு திரும்புவார்:
அதனால் சுதந்திர பறவையாக பேட்டிங் செய்த அவர் சதமடித்து விரைவில் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற 14 போட்டிகளில் 341 ரன்களை மட்டுமே எடுத்த அவர் சுமாராகவே செயல்பட்டார். குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் இந்த சீசனில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 முறை கோல்டன் டக் அவுட்டானார். அதைவிட கடந்த பல வருடங்களாக ஓடிஓடி அவரின் உடம்பிலும் ஆட்டத்திலும் களைப்பு ஏற்பட்டது வெளிப்படையாக அவரின் முகத்தில் தெரிந்தது. அதனால் உடனடியாக 2 – 3 மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்பும் முடிவை எடுக்குமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

VIrat Kohli Knock Out

ஆனால் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று கூறிய அவர் விமர்சனங்களுக்கு பின்வாங்காமல் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் கடைசிவரை விளையாடிய போதிலும் எந்த மாற்றமும் பலனும் கிடைக்கவில்லை. இதனால் விராட் கோலி பார்முக்கு திரும்பி விடுவார் என எதிர்பார்த்து எதிர்பார்த்து அவரின் ரசிகர்கள் சோர்ந்து போய் விட்டனர். இந்த நிலைமையில் விரைவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அவருக்கு பிசிசிஐ தாமாக முன்வந்து ஓய்வளித்துள்ளது.

- Advertisement -

அசாருதீன் பதில்:
இந்நிலையில் விராட் கோலி பார்ம் இழக்கவில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் அவருக்கு அதிர்ஷ்டம் தான் கை கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தற்போது சிறிய ஓய்வு பெற்றுள்ள அவர் அடுத்ததாக ஜூலை 1-ஆம் தேதி துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் அதிர்ஷ்டத்துடன் பார்முக்கு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Azharuddin

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி 50+ ரன்கள் அடித்து அவுட்டாகும்போது தோல்வியடைவது போல் நமக்கு தோன்றுகிறது. இந்த வருடம் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதும் உண்மை தான். இருப்பினும் சிறப்பான வீரர்கள் கூட தங்களது வாழ்நாளில் கடினமான தருணங்களை கடந்துள்ளார்கள். அவர் (விராட்) நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளார். தற்போது சிறிய ஓய்வில் இருக்கும் அவர் இங்கிலாந்தில் திரும்புவார் என்று நம்பலாம்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது அவ்வப்போது 50 ரன்களை அடிக்கும் விராட் கோலி அதை சதமாக மாற்ற முடியாததால் பார்மின்றி தவிப்பது போல் அனைவருக்கும் தோன்றுவதாக தெரிவித்துள்ள முகமது அசாருதீன் கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைத்தால் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் பார்முக்கு திரும்பி விடுவார் என்று தெரிவித்தார். அவர் கூறுவது போல இதற்கு முந்தைய போட்டிகளில் ரன் மெஷினை போல் சிறப்பாக செயல்பட்டு தனக்கென்று ஒரு முத்திரையை உருவாக்கி களமிறங்கும் அத்தனை போட்டிகளிலும் சதமடிப்பார் என்ற எதிர்பார்ப்பை அனைவரிடமும் உருவாக்கியுள்ளார். அதில் அவர் இப்போது தடுமாறுவது தான் பார்மின்றி தவிப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் இந்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காத நிலையில் விராட் கோலி 2 அரை சதங்களை அடித்துள்ளார்.

INDvsENG

எனவே அதிர்ஷ்டம் மட்டுமே விராட் கோலியின் சதத்திற்கு தடையாக இருப்பதாக கூறும் முகமது அசாருதீன் ஒரு முறை அது கிடைத்துவிட்டால் மீண்டும் அவர் பழைய பன்னீர்செல்வமாக மாறிவிடுவார் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவரின் நுணுக்கங்களில் எந்த தவறும் இல்லை. சில நேரங்களில் உங்களுக்கு சற்று அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது. இந்த தருணத்தில் ஒரு முறை அவர் பெரிய ஸ்கோர் அல்லது ஒரு சதமடித்து விட்டால் அந்தப் பழைய ஆக்ரோஷமும் தன்னம்பிக்கையும் தாமாகவே வந்துவிடும்” என்று கூறினார்.

Advertisement