இந்தியாவை பாத்து கத்துக்கோங்க. இல்லனா பாகிஸ்தான் இப்படியே டம்மியா இருக்க வேண்டியது தான் – அமீர் விளாசல்

Amir
- Advertisement -

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னனி வேகப் பந்து வீச்சாளரான முஹம்மது ஆமீர், தற்போது அந்த அணியில் இளம் வீரர்களின் தேர்வு குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை சரமாரியாக விமர்சித்து உள்ளார். குறிப்பாக இந்தியா எப்படி தங்களது அணிக்காக பல திறமையான இளம் வீரர்களை உருவாக்குகிறது என்பதை அந்த நாட்டிடம் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையும் வழங்கியுள்ளார். 29 வயதான முஹம்மது ஆமீர், அந்நாட்டின் தலை சிறந்த பந்து வீச்சாளராக இருந்தபோதே, தனது ஓய்வு முடிவை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Pak

- Advertisement -

இப்படி அவர் இளம் வயதிலயே ஓய்வுபெற, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் அழுத்தமே காரணமென்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ஆமீர். தற்போது பாகிஸ்தான் அணியில் இளம் வீர்ர்களின் தேர்வு முறை சரியில்லை என்றி கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், பாகிஸ்தான் அணியானது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இளம் வீரர்களுக்கான பயிற்சிப் போட்டியாக கருதுகின்றது. இளம் வீரர்கள் இங்கு வந்து பாடம் கற்றுக்கொள்ள இது ஒன்றும் பள்ளிக்கூடம் கிடையாது.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இளம் வீரர்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் சூழலை உருவாக்காமல், அவர்களை நேரிடையாகவே சர்வதேச போட்டிகளில் களமிறக்கவே ஆசைப்படுகிறது என்று கூறினார். மேலும் இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் உள்ளூர் கிரிக்கெட்டைப் பற்றி பேசிய அவர், இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளைப் பாருங்கள், அவர்கள் தங்களது நாட்டில் உள்ளூர் கிரிக்கெட்டை அதி அற்புதமாக வளர்த்து வருகின்றனர். எனவே அங்கிருந்து நிறைய கற்றுக்கொண்டு வரும் இளம் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் தங்களது திறமையை எளிதாக வெளிக்காட்டுகின்றனர்.

sky 1

குறிப்பாக தற்போது இந்தியாவிற்கு அறிமுகமான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தங்களது முதல் சர்வதேச போட்டிகளிலேயே தங்களுடைய திறமையை நிரூபித்தனர். அவர்கள் அந்நாட்டில் நிறைய உள்ளூர் போட்டிகளில் விளையாடி ஏற்கனவே நிறைய கற்றுக்கொண்டதால் தான், தங்களது முதல் சர்வதேச போட்டியிலேயே மிகச் சிறப்பாக விளையாடினர்.

பாகிஸ்தானில் நிறைய இளம் வீரர்கள், எடுத்தவுடனேயே தேசிய அணிக்காக விளையாட வைக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த அனுகுமுறையால் இளம் வீரர்கள் மிகந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை உடனடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் சரிசெய்தாக வேண்டும். இல்லையெனில் என்னைப்போல் பல இளம் வீர்ர்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று அவர் கூறினார்.

Advertisement