இவருடன் இணைந்து முதன்முறையாக விளையாட இருப்பது மகிழ்ச்சி – முகமது சிராஜ் ஓபன் டாக்

Siraj
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரரான முகமது சிராஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடினார். ஆஸ்திரேலிய தொடரில் தான் அறிமுகமானாலும் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். அதிலும் குறிப்பாக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் உதவி புரிந்திருந்தார்.

siraj 2

- Advertisement -

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தேர்வாகியுள்ள சிராஜ் ஆஸ்திரேலியா தொடரை போன்று இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நான் எனது நாட்டிற்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஆஸ்திரேலிய தொடரில் விளையாடியது போன்றே இங்கிலாந்து தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கிறேன். மேலும் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதளவு உதவ விரும்புகிறேன். ஆஸ்திரேலிய தொடரில் பந்துவீசியது போன்று இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக பந்து வீச முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

siraj

ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பல விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். வீரர்களின் அறையில் இருந்து பயிற்சி வரை அனைத்திலும் புதுப்புது விஷயங்கள் எனக்கு பாடமாக கிடைத்தன. புஜாரா, ரகானே, ஷமி, ரோகித்சர்மா, ரவிசாஸ்திரி என பலரும் எனக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்து உள்ளனர். இங்கிலாந்து அணிக்கெதிராக அவைகளை நான் உபயோகப்படுத்தி எனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர விரும்புகிறேன்.

Siraj-3

நான் இந்திய அணியில் பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோருடன் இணைந்து பந்துவீசி உள்ளேன். ஆனால் அவர்களைத் தவிர தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ள இசாந்த் சர்மாவுடன் இணைந்து பந்துவீச ஆர்வமாகக் காத்திருக்கிறேன். அவரிடம் இருந்து பல முக்கியமான விஷயங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என சிராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement