கேப்டன் ரஹானே இருக்க அறிமுக வீரர் சிராஜ்க்கு தொப்பியை வழங்கிய அஷ்வின் – காரணம் என்ன தெரியுமா ?

Siraj-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வியால் இந்திய இன்றைய போட்டியில் நான்கு முக்கிய மாற்றங்கள் இருந்தன. அதன்படி கேப்டன் கோலிக்கு பதிலாக ஜடேஜாவும், விக்கெட் கீப்பர் சகாவுக்கு பதிலாக பண்ட்டும் அணியில் இடம் பெற்றனர். அதேபோன்று இந்த போட்டியில் புதுமுக வீரர்கள் 2 பேர் இந்திய அணிக்காக அறிமுகமாயினர்.

siraj

- Advertisement -

முதல் போட்டியில் சொதப்பிய ப்ரித்வி ஷாவிற்க்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணிக்காக அறிமுகமானார்கள். முகமது சிராஜ் ஷமிக்கு மாற்று வீரர் என்றாலும் இந்தியா ஏ அணி மற்றும் ரஞ்சி கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திபின்னர் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை 298 ஆவது வீரராக அறிமுகமாகிய சிராஜ் தனது அறிமுக தொப்பியை தமிழக பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அன்மையில் தனது தந்தையை இழந்த சிராஜ் இறுதிச் சடங்கிற்கு கூட பங்கேற்காமல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இருந்துவிட்டார். மேலும் இந்திய அணிக்காக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுப்பதே எனது தந்தைக்கு நான் செலுத்தும் அஞ்சலி என்றும் அவர் ஏற்கனவே உறுதியளித்திருந்தார்.

siraj 2

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் ரகானே இருக்க அவர் ஏன் அஸ்வினிடம் இருந்து அறிமுக தொப்பியை வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போதைய இந்திய அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை சீனியர் வீரராக இருப்பவர் அஸ்வின் தான். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 72 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார் .அவரை ஒப்பிடும்போது ரகானே கூட 66 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.

எனவே அணியில் உள்ள சீனியர் வீரர் என்பதாலும் ஒரு தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற காரணத்தினாலும் அவரது கையில் முகமது சிராஜிக்கு அறிமுக தொப்பியும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அறிமுக வீரர் சிராஜ் 15 ஓவர்கள் வீசி 40 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதேபோன்று அவருக்கு தொப்பியை வழங்கிய அஸ்வினும் 24 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement