துபாயில் இந்த 6 நாட்கள் நான் பட்ட கஷ்டம் இருக்கே. அய்யோ முடியல – புலம்பிய பஞ்சாப் அணி வீரர்

kxip

இந்தியாவில் நடைபெற இருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் தற்போது அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும். இதற்காக ஏற்கனவே இத் தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்தன. மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு தற்போது பயிற்சியையும் அவர்கள் தொடங்கி விட்டனர்.

Dubai

இந்நிலையில் தற்போது இந்த துபாயில் தனிமைப்படுத்தபட்டு இருந்த இந்த ஆறு நாட்கள் குறித்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முஹமது ஷமி தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது :

துபாயில் இந்த ஆறு நாட்கள் ஹோட்டல் அறையில் தனியே இருந்தேன். நான்கு மாதங்கள் வீட்டில் இருந்த நாட்களைவிட இந்த ஆறு நாட்களும் மிக கடுமையானதாக இருந்தது. என் வீட்டில் எனக்கான பயிற்சிகள் மற்றும் இதர விஷயங்களில் கவனம் செலுத்தினேன். ஆனால் இந்த ஆறு நாட்கள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்போது பரவாயில்லை ஊரடங்கு காலத்தில் நான் எடுத்த பயிற்சிகள் தற்போது எனக்கு பயனுள்ள வகையில் இருக்கின்றன.

Shami

ஒரு கிரிக்கெட் வீரராக நாங்கள் 24 மணி நேரமும் வீட்டிற்குள் அடைந்து இருப்பது என்பது முடியாத ஒன்று. அதனால் என்னை நான் பிஸியாக வைத்துக் கொண்டேன். விவசாயம், பயிற்சி, நண்பர்களுடன் உரையாடுவது, என அனைத்திலும் கவனம் செலுத்தினேன். கிரிக்கெட் வீரர்களிடம் தற்போது மீண்டும் விளையாடுவதற்கான ஆர்வம் மேலோங்கி இருக்கிறது. மேலும் இங்கு வந்து அனைவரும் பயிற்சி செய்வதின் காணமுடிகிறது.

- Advertisement -

Shami 1

நாங்கள் அனைவரும் 100 சதவீத தகுதியுடன் உள்ளோம் எனக்கும் கேப்டன் ராகுலுக்கும் நல்ல நட்பு உள்ளது. நிச்சயம் அது களத்தில் வெளிப்படும் என்று ஷமி கூறியுள்ளாது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதேபோன்று இந்த 6 நாட்கள் தனிப்படுத்துதல் மிக கடுமையாக இருந்தது என்ற அதே கருத்தினை அஷ்வினும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.