இப்படி பண்றவங்க எல்லாம் உண்மையான இந்தியராகவே இருக்க முடியாது – முகமது ஷமி ஆவேசம்

shami
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இதுவரை 57 டெஸ்ட் போட்டிகள், 79 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் கிட்டத்தட்ட 370க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே தனது பந்து வீச்சின் உச்சத்தில் இருந்த அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சற்று சுமாரான பந்துவீச்சையே வெளிப்படுத்தினார்.

shami 1

- Advertisement -

அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் சுற்றின் போது அவர் விக்கெட் வீழ்த்த முடியாமல் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தார். குறிப்பிட்ட அந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3.5 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 43 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

இதன் காரணமாக முகமது ஷமியை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக முகமது ஷமி சார்ந்த மதத்தையும் குறிப்பிட்டு அவர் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக எளிதாக ரன்களை அடிக்கும்படி பந்துவீசி விட்டார் என்றும் மதத்தின் ரீதியில் அவர் அவர்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டார் என்பது போன்றெல்லாம் ஷமியை கடுமையாக விமர்சனம் செய்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

shami 2

அந்த சம்பவம் இணையத்தில் வைரலான போது மதத்தின் ரீதியாக யாரையும் விமர்சனமோ அல்லது கிண்டல் செய்ய வேண்டாம் அது நல்லதல்ல என்று இந்திய அணியின் கேப்டன் கோலியும் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு ஆதரவாக அவர் சிறந்த வீரர் தான் என்றும் அவர் மீது எந்த தவறும் இல்லை என்றும் ஆதரவினை தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ள முகமது ஷமி பேசுகையில் : அதுபோன்ற ஒரு விமர்சனத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மதத்தின் அடிப்படையில் ஒருவரை விமர்சனம் செய்பவர்கள் உண்மையான ரசிகரராக இருக்க முடியாது. ஏன் அவர்கள் உண்மையான இந்தியர்களாக கூட இருக்க முடியாது.

இதையும் படிங்க : இறந்த தனது தந்தையின் இறுதி சடங்கினை வீடியோ கால் மூலம் கண்ட ரஞ்சி வீரர் – அடுத்தடுத்து ஏற்பட்ட சோகம்

ஏனெனில் எவர் ஒருவரையும் அவர் சார்ந்த மதத்தினை சம்பந்தப்படுத்தி விமர்சனம் செய்வது மிகவும் தவறான காரியம். ஒரு வீரரை நீங்கள் ஹீரோவாக பார்க்கும்போது நிச்சயம் இது போன்று நடந்து கொள்ளமாட்டீர்கள். அது போன்ற விமர்சனங்கள் எழும் போது நாம் மனம் தளரக் கூடாது எனவும் முகமது ஷமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement