டி20 உலககோப்பை : பும்ராவிற்கு பதிலாக விளையாடப்போறது இவர்தான் – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 2022-ஆம் ஆண்டிற்கான ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மாவின் தலைமையில் அறிவிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியா பயணித்து பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக யார் அணியில் இணைவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவில் வந்தது.

Bumrah

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் 15 வது வீரராக முதன்மை அணியில் இணைந்துள்ள வீரர் குறித்த அறிவிப்பை பி.சி.சி.ஐ உறுதி செய்துள்ளது. அதன்படி ஆசியக் கோப்பை தொடரில் ஓய்வில் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் இந்திய அணியில் இருந்து விலகினார்.

அதன் பின்னர் மருத்துவக்குழு அறிக்கை வெளியான பின்னர் அவர் டி20 உலக கோப்பையில் தொடரிலும் விளையாட மாட்டார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது.

Shami

அதன் பின்னர் அவருக்கு பதிலாக யார் இடம் பிடிப்பார்கள் என்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்த வேளையில் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் போன்ற பல வீரர்கள் அந்த இடத்திற்கு போட்டியில் இருந்தனர். இந்நிலையில் மாற்று வீரராக இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பி.சி.சி.ஐ சார்பில் வெளியான அறிக்கையில் : பும்ரா இல்லாத நிலையில் அனுபவ வீரரான முகமது ஷமி இடம்பெற வேண்டும் என்பதே தேர்வு குழுவினர்களின் முடிவாக உள்ளது. எனவே பும்ராவிற்கு பதிலாக முகமது ஷமி இந்திய அணியுடன் இணைவார் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்த டி20 உலககோப்பை ஜெயிக்க அந்த பையன் தான் முக்கிய காரணமா இருப்பான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

மேலும் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஸ்டாண்ட் பை வீரர்களாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவில் இருப்பார்கள் என பிசிசிஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement