கொஞ்ச நஞ்சமா பேசுனீங்க. இப்போ என்ன ஆச்சி. சோயிப் அக்தருக்கு நோஸ் கட் கொடுத்த – முகமது ஷமி

Shami-and-Akhtar
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் ஐசிசி-யின் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரானது கோலாகலமாக நிறைவடைந்தது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் தேர்வாகின. அதன்படி இன்றைய இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 19 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணி பெற்ற இந்த தோல்விக்கு வருத்தத்தை தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சோயிப் அக்தர் தனது டிவிட்டர் பக்கத்தில் உடைந்த இதயம் போன்ற ஒரு ஸ்மைலியை மட்டும் வைத்து ஒரு டிவீட்டினை வெளியிட்டு தனது வேதனையை பகிர்ந்து இருந்தார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகவே அதற்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி :

“மன்னித்து விடுங்கள் சகோதரா”, “இதற்கு பேர்தான் கர்மா” என்று பதில் அளித்து இருந்தார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் யாதெனில் இந்த உலகக் கோப்பை தொடர் மட்டுமின்றி எப்போதுமே இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறும் போது சோயிப் அக்தர் அவரது இஷ்டத்திற்கு தனது கருத்தினை பேசி அதனை சமூக வலைதளம் மூலம் இந்திய அணியை விமர்சித்து வெளியிடுவார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த முக்கியமான டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததால் அது உங்களுக்கே திரும்பி விட்டது என்பது போன்று “கர்மா இஸ் பூமராங்” என முகமது ஷமி பகிர்ந்த இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : அவர் மட்டும் இல்லனா 2007-லயே ரிட்டையர் ஆகிருப்பேன் – மனம்திறந்த சச்சின் டெண்டுல்கர் (பேசியது என்ன?)

மேலும் இந்திய அணி குறித்த தரக்குறைவான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முகமது ஷமி இந்த டிவீட்டை வெளியிட்டுள்ளார் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எது எப்படி இருப்பினும் இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் இந்த போராட்ட குணம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

Advertisement