சையத் முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரரின் தம்பி – யார் தெரியுமா ?

Shami-brother

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய ரசிகர்கள் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி எப்போது நடைபெறும் என்று ஆவலுடன் காத்திருந்தபோது 2021 பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

vijay

தற்போது இதற்கு முன்னர் சையத் முஸ்டாக் அலி டி20 தொடர் ஜனவரி 10 முதல் 31 வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் 2021 ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெறுவது, இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த டி20 தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்களும் விளையாட இருக்கின்றனர். உத்திர பிரதேஷ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னாவும், கேரளா அணிக்காக ஸ்ரீசாந்தும், ஆந்திரப்பிரதேச அணிக்காக அம்பத்தி ராயுடு மற்றும் பஞ்சாப் அணி சார்பாக யுவராஜ் சிங்கும் விளையாடுகின்றனர். மேலும் டெல்லி அணிக்காக தவான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாடுகின்றனர்.

Sreesanth

அதேபோன்று பல்வேறு மாநில அணிக்காகவும் பல இந்திய வீரர்கள் விளையாட இருப்பதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பெங்கால் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்கால் அணிக்கு அனுஸ்தப் மஜும்தான் கேப்டனாகவும் ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் இளைய சகோதரரான முகமது கைஃப் இந்த டி20 தொடர் பெங்கால் அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

Shami

முகமது ஷமியின் சகோதரர் முகமது கைப் வேகப்பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டராக பெங்கால் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்கால் அணி வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி முதல் போட்டியில் ஒடிசாவை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.