அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் ஐ.சி.சி-யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது இலங்கை நாட்டிலோ நடந்தால் மட்டுமே நாங்கள் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவோம் என்றும் மற்றபடி இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்க வாய்ப்பிலை என ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை இந்தியா விளையாடும் போட்டிகள் எங்கு நடக்கும்? என்பது உறுதி செய்யப்படாததால் பி.சி.சி.ஐ-யானது இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று அந்தத் தொடரில் பங்கேற்காது என்று உறுதிப்பட அறிவித்துவிட்டது.
கண்டிப்பா இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வரனும் :
ஆனாலும் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் இருந்து மாற்றி தென்னாப்பிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐசிசி தரப்பில் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி இந்த தொடரானது இடமாற்றம் செய்யப்பட்டால் நிச்சயம் அந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் என்று கூறிவரும் வேளையில் தற்போதைய டி20 பாகிஸ்தான் அணியின் கேப்டனான முகமது ரிஸ்வான் இந்திய வீரர்களான சூரியகுமார் யாதவ் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு ஒரு உருக்கமான வேண்டுகோளை முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
பாகிஸ்தான் மக்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல் ராகுல் போன்ற வீரர்களை மனதார வரவேற்பார்கள். பாகிஸ்தானிற்கு இந்திய அணி வந்து விளையாட வேண்டும் என்று மனதார விரும்புகிறார்கள். மக்களின் இந்த முடிவை நாங்களும் வரவேற்கிறோம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து எங்களது அணியின் நிர்வாகம் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் என்னை பொறுத்தவரை இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வந்து இந்த தொடரில் பங்கேற்பார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் இன்றளவும் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணி செல்லாது என்றும் அப்படி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் தான் நடக்கும் என்றால் இந்திய அணி பங்கேற்காது என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி அவுட்டாக்கனும்னு எனக்கு தெரியும்.. பிளான் என்கிட்ட இருக்கு – ரவிச்சந்திரன் அஷ்வின்
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியதால் அதேபோன்று இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.