ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இரண்டு முறை நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளதால் இம்முறை நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்திய அணி அங்கு சென்றுள்ளது. அதேபோன்று இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இருமுறை டெஸ்ட் தொடரை தவறவிட்டதால் அதற்குப் பழி தீர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய அணியும் தற்போது தயாராகி வருவதால் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்தனும்னு எனக்கு தெரியும் :
இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நவம்பர் 22-ஆம் தேதி துவங்கும் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஏற்கனவே ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணித்து விட்டது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பின்னர் வருத்தம் தெரிவித்த அவர் :
எதிர்வரும் இந்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த விரும்புதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை எவ்வாறு வீழ்த்த வேண்டும்? என்பது குறித்த ஐடியாவும் தன்னிடம் தெளிவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும் ஆர்வம் உடைய பேட்ஸ்மேன்களில் ஸ்டீவ் ஸ்மித் மிக முக்கியமானவர்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடும் அணுகுமுறையை கொண்ட அவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் நிச்சயம் புதிய திட்டங்களுடன் வருவார். எனவே அவருக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்த தீவிரமான திட்டத்தினை நான் வகுத்து வருகிறேன். இம்முறை அவரை எவ்வாறு வீழ்த்த வேண்டும்? என்பது குறித்த பல்வேறு வழிகளை நான் அறிந்துள்ளேன்.
ஐ.பி.எல் தொடரில் டெல்லி மற்றும் புனே ஆகிய அணிகளில் நான் அவருடன் இணைந்து விளையாடிய போது அவர் வலைப்பயிற்சியில் எவ்வாறு தயாராகிறார்? என்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவருக்கு எதிராக நான் வலைப்பயிற்சியில் பந்துவீசும் போது அவரை எவ்வாறு வீழ்த்த வேண்டும்? என்று குறித்த பல்வேறு விடயங்களை தெரிந்து கொண்டேன். ஸ்டீவ் ஸ்மித் தெளிவான அணுகுமுறையை கொண்டவர்.
இதையும் படிங்க : கே.எல் ராகுல் வேண்டாம்.. அந்த இளம்வீரரை துவக்க வீரர்க களமிறக்குங்கள் – சுரேஷ் ரெய்னா யோசனை
ஒவ்வொரு முறை அவருக்கு எதிராக பந்துவீச வாய்ப்பு கிடைத்த போதும் அவரை வீழ்த்த முடியுமா? என்பதை சோதித்து பார்த்திருக்கிறேன். ஐபிஎல் தொடரில் அவருடன் இணைந்து விளையாடிய அனுபவம் நிச்சயமாக இந்த தொடரில் அவரை வீழ்த்த கைகொடுக்கும் என்று நினைக்கிறேன். அவருக்கு எதிரான தெளிவான திட்டங்கள் இருப்பதினால் நிச்சயம் அவரை இந்து தொடரில் வீழ்த்த முடியும் என்று நம்புவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



