கே.எல் ராகுல் வேண்டாம்.. அந்த இளம்வீரரை துவக்க வீரர்க களமிறக்குங்கள் – சுரேஷ் ரெய்னா யோசனை

Raina
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வது சிக்கலாகியுள்ளது.

துவக்க வீரராக அந்த இளம்வீரரை விளையாட வைக்கலாம் :

எனவே எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி மூன்று அல்லது நான்கு போட்டிகளில் அந்த அணியை வீழ்த்தி தொடரை வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதனால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது பல கருத்துக்களை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாவிட்டால் எந்த வீரர் துவக்க வீரராக விளையாட வேண்டும்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவின் துவக்க வீரருக்கான இடத்தில் கே.எல் ராகுல் துவக்க ஆட்டக்காரராக வரலாம்.

ஆனால் அவரை விட துருவ் ஜுரேலை அந்த இடத்தில் களமிறக்கினால் அது இந்திய அணிக்கு மிகவும் நல்லது. இதற்கான முடிவுகளை பயிற்சியாளர் தான் எடுக்க வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக இம்முறை மிகச்சிறப்பாக செயல்படப்போகும் எக்ஸ்-பேக்டர் வீரராக நான் துருவ் ஜுரேலை பார்க்கிறேன். ஏனென்றால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பயிற்சி போட்டியில் இந்திய ஏ அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது களத்திற்கு வந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அவரிடம் நல்ல டெக்னிக் மற்றும் ஷாட்டுகள் இருக்கின்றன. எனவே அவரால் நிலைத்து நின்று ரன் குவிக்க முடியும் என்று தெரிகிறது. அதேபோன்று தற்போது கே.எல் ராகுல் ஃபார்மில் இல்லாததால் துருவ் ஜுரேலை களமிறக்குவது நல்லது என்று நினைக்கிறேன். சிறப்பாக ஒரு விளையாடும் இளைஞனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கக் கூடாது? என சுரேஷ் ரெய்னா தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் முதலிடம் பிடித்து அசத்திய பாகிஸ்தான் வீரர்கள் – இந்திய எந்த இடம்?

ஏற்கனவே ரோகித் சர்மா இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பதனால் இந்த முதல் போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரராக கே.எல் ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவர் பிளேயிங் லெவனின் பேலன்ஸை பொறுத்து களமிறக்கப்படுவார்கள் என கௌதம் கம்பீர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement