போன முறை மிஸ் ஆயிடுச்சி. ஆனா இந்தமுறை ஆகாது. ரெடியா இருக்கோம் – எச்சரிக்கை விடுத்த பாக் வீரர்

IND vs PAK Babar Azam Rohit Sharma
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய 15-வது ஆசியக்கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து அடுத்த சுற்றிற்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

- Advertisement -

நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணியானது “சூப்பர் 4” சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்ததாக இந்த அடுத்த சுற்றில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் சந்திக்கிறது.

மற்றொரு போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாட இருக்கின்றன. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக மோத இருக்கும் ஆட்டம் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான முகமது ரிஸ்வான் கூறுகையில் :

rizwan 2

சார்ஜா ஆடுகளத்தில் பவர்பிளே ஓவர்களிலேயே 60 ரன்கள் வரை அடிக்க முடியும் என்பதை கணக்கு செய்தே விளையாடினோம். அதன்படி இந்த போட்டியில் விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ஆனால் அடுத்ததாக இந்தியா பாகிஸ்தான் மோதப்போகும் போட்டிதான் எனக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து வீரர்களுக்குமே அது ஒரு அழுத்தம் மிகுந்த போட்டியாக இருக்கும்.

- Advertisement -

ஏனெனில் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இந்த போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நாங்களும் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பது எப்போதுமே உணர்வுபூர்வமானது. இது நிச்சயம் ஒரு இறுதிப் போட்டி போல இருக்கும்.

இதையும் படிங்க : கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் காணாமல் போன 3 இந்திய வீரர்களின் பட்டியல்

ஏற்கனவே நடைபெற்ற ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை சந்தித்து விட்டோம். இம்முறை நிச்சயமாக இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம் என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement