கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் காணாமல் போன 3 இந்திய வீரர்களின் பட்டியல்

varun
- Advertisement -

வரும் அக்டோபரில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை வெல்வதற்காக தயாராகி வரும் இந்தியா ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் விளையாடி வருகிறது. கடந்த வருடம் கடைசியக அங்கு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு கோப்பையை வெல்லும் பலமான அணியாக மாறியுள்ளது. கடந்த முறையும் தரமான வீரர்கள் இருந்த போதிலும் பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டியில் சிறப்பாக செயல்பட தவறியதால் வெளியேறிய இந்திய அணியில் சில வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

INDvsPAK

- Advertisement -

அதில் சில வீரர்கள் அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் வந்ததால் வாய்ப்பை இழந்த நிலையில் சிலர் சுமாராக செயல்பட்டதால் அதன்பின் அணியிலிருந்தே காணாமல் போயுள்ளனர். அந்த வகையில் 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்திருந்த சில வீரர்கள் இந்த வருட உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல் கூட இடம் பிடிக்காத அளவுக்கு வெகுதூரம் சென்று விட்டார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

3. முகமத் ஷமி: கடந்த உலக கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் 3வது வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்ட இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுமாராக பந்து வீசினாலும் அந்த தொடர் முழுவதும் விளையாடினார். ஒரு சில போட்டிகளை தவிர்த்து ஓரளவு சிறப்பாக பந்து வீசிய அவருக்கு அந்த உலகக் கோப்பையே டி20 அணியில் கடைசியாக விளையாடிய வாய்ப்பாக அமைந்தது.

shami 1

ஏனெனில் 30 வயதை கடந்துவிட்ட இவருக்கு பதில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அதன்பின் ஒரு வாய்ப்பு கூட கொடுக்காத தேர்வுக்குழு ஹர்ஷல் பட்டேல், அவேஷ் கான், பிரஸித் கிருஷ்ணா, அர்ஷதீப் சிங் போன்ற அடுத்த தலைமுறை பவுலர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளது. மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவதற்காக ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணியில் சாம்பியன் பட்டம் வென்ற போதிலும் வருங்காலத்தில் இந்திய டி20 அணியில் உங்களுக்கு வாய்ப்பில்லை என்று வெளிப்படையாகவே அவரிடம் தேர்வுக்குழு கூறியுள்ளது.

- Advertisement -

2. ராகுல் சாஹர்: இந்திய அணியின் முதன்மை டி20 சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் சஹால் சுமாரான பார்மில் இருந்த காரணத்தால் 2021 ஐபிஎல் தொடரில் அசத்திய இவர் ஆச்சரியப்படும் வகையில் உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் நமிபியா அணிக்கு எதிரான 1 போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்ற இவர் 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காத நிலையில் அதன்பின் எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை.

chahar

அந்த உலகக்கோப்பையில் ஒரு போட்டியானாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசாத இவர் அதன் காரணமாக அதன்பின் நடந்த நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய டி20 தொடர்களில் சேர்க்கப்படவில்லை. மேலும் ஐபிஎல் 2022 தொடரிலும் பஞ்சாப் அணிக்காக சுமாராக பந்து வீசியதால் இந்திய அணியிலிருந்து விலகியுள்ள இவர் இளம் வீரராக இருப்பதால் வரும் காலங்களில் முயற்சித்தால் மீண்டும் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

1. வருண் சக்கரவர்த்தி: ஐபிஎல் 2021 தொடரில் கொல்கத்தா அணிக்காக அபாரமாக பந்துவீசிய தமிழகத்தைச் சேர்ந்த இவர் அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமாகி 3 போட்டியில் மட்டுமே விளையாடியிருந்த நிலையில் நேரடியாக உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் பெரிய அளவில் அனுபவமில்லாத போதிலும் அப்போதைய பார்மை மையப்படுத்தி தேர்வு செய்யப்பட்ட இவர் உலகக்கோப்பையில் 3 போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காமல் சுமாராக பந்து வீசினார்.

Varun-chakravarthy

உள்ளூர் தொடரில் அசத்திய இவரது திறமையை பார்த்து ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட அணி நிர்வாகத்திடம் பரிந்துரைத்து வாங்க வைத்த தினேஷ் கார்த்திக் களத்தில் விக்கெட் கீப்பராக பேட்ஸ்மேன்கள் அடிக்கும் போதெல்லாம் ஸ்டம்ப்க்கு பின்புறமும் அருகிலும் சென்று தமிழிலேயே ஆலோசனை கொடுத்து வெற்றிகரமாக செயல்பட உதவியதை அனைவரும் அறிவோம்.

ஆனால் அதற்காக அப்படியே பந்துவீச பழகிய அவர் தினேஷ் கார்த்திக் எனும் சாவி இல்லாத பொம்மையாக உலகக்கோப்பையில் சுமாராக பந்து வீசினார். அதனால் அதிர்ஷ்டமாக கிடைத்த வாய்ப்பே கடைசியாகவும் போனது. மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாடியதால் கொல்கத்தா அணிக்காக தக்க வைக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி அவரில்லாமல் சுமாராக செயல்பட்டு கடைசியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். தற்போது 31 வயதை கடந்துவிட்ட இவர் இனிமேல் இந்திய அணிக்குள் நுழைவதற்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவாகும்.

Advertisement