18 வருட டி20 உலகக் கோப்பை வரலாற்றின் தடவலான இன்னிங்ஸ் ஆடிய ரிஸ்வான்.. மோசமான உலக சாதனை

Mohammad Rizwan 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற 22வது லீக் போட்டியில் கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவரில் 106/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப், முகமத் அமீர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 107 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறியது. இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததால் 17.3 ஓவரில் 107/3 ரன்கள் எடுத்த அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 53* (53) கேப்டன் பாபர் அசாம் 33 (33) ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

மோசமான சாதனை:
அதனால் இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிம்மதி பெருமூச்சு விட்டது. குறிப்பாக கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் முதல் போட்டிகள் தோற்ற அந்த அணி பரம எதிரி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 120 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் இப்போட்டியில் வென்ற பாகிஸ்தான் சூப்பர் 8 வாய்ப்பை தற்காலிகமாக தக்க வைத்துக் கொண்டது.

அதனால் கனடா சார்பில் அதிகபட்சமாக டிலோன் ஹேய்லிகர் 2 தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இப்போட்டியில் வெறும் 107 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு துவக்க வீரராக களமிறங்கிய முகமது ரிஸ்வான் ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடினார். குறிப்பாக நியூயார்க் மைதானம் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருக்கிறது என்பதை அனைவருமே அறிவோம்.

- Advertisement -

அதனால் அவசரப்படாத அவர் நிதானமாக நான் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அதற்காக 10 ஓவர்கள் கடந்து நன்கு செட்டிலான பின்பும் அதிரடியை துவக்காத அவர் 52 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். இதன் வாயிலாக 18 வருட டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் மெதுவான அரை சதத்தை அடித்த வீரர் என்ற மோசமான பரிதாபமான உலக சாதனையை முகமது ரிஸ்வான் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இலவசமா தரதில்ல.. இந்த ஸ்பெஷல் திறமையாலேயே பும்ரா எங்க போனாலும் அசத்துறாரு.. ஸ்டைன் பாராட்டு

இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இதே போல நிதானமாக விளையாடிய அவர் முக்கிய நேரத்தில் அவுட்டானது பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமானது. அந்த மோசமான சாதனையின் பட்டியல்:
1. முகமது ரிஸ்வான் : 52 பந்துகள் கனடாவுக்கு எதிராக, 2024*
2. டேவிட் மில்லர் : 50 பந்துகள், நெதர்லாந்துக்கு எதிராக, 2024
3. டேவோன் ஸ்மித் : 49 பந்துகள், வங்கதேசத்துக்கு எதிராக, 2007
4. டேவிட் ஹசி : 49 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2010

Advertisement