மேஜிக் கேப்டன்ஷிப் எல்லாம் அந்த தொடரில் மட்டும் தானா? ரோஹித்தை விளாசும் முகமது கைஃப் – பேசியது என்ன?

Mohammad-Kaif
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் அவமான தோல்வியை சந்தித்த இந்தியா இத்தொடரை வெல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதியன்று டாக்காவில் நடைபெற்ற முதல் போட்டியில் தரமாக பந்து வீசிய வங்கதேசத்திடம் பேட்டிங்கில் பெட்டிப் பாம்பாக அடங்கிய இந்தியா 186 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ராகுல் 73 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட் எடுத்தார்.

Bangladesh

- Advertisement -

அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் முதல் 40 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவிடம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 136/9 என தோல்வியின் பிடியில் சிக்கியது. அதனால் வெற்றி உறுதியென்று மமதையில் செயல்பட்ட இந்தியாவின் அஜாக்கிரதையை பயன்படுத்திய மெஹதி ஹசன் கேஎல் ராகுல் நழுவ விட்ட கேட்ச்சை பயன்படுத்தி 38* (39) ரன்கள் குவித்து தோல்வியை பரிசளித்தார். மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் டெயில் எண்டர்கள் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை பறிக்கும் அளவுக்கு சொதப்பிய இந்திய அணியினர் கடுமையான விமர்சனங்களை சந்திக்க வருகிறார்கள். குறிப்பாக கைக்கு கிடைத்த வெற்றியை கோட்டை விடும் அளவுக்கு கடைசி 6 ஓவர்களில் பவுலர்களை கேப்டன் ரோகித் சர்மா பயன்படுத்திய விதம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதை எதிர்பார்க்கல:
அதிலும் குறிப்பாக 10* (11) ரன்கள் எடுத்த முஸ்தஃபிசூர் ரகுமான் இடது கை பேட்ஸ்மேன் என்ற நிலைமையில் 5 ஓவர்களில் 17 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பான செயல்பட்ட ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருக்கு டெத் ஓவர்களில் ஒரு ஓவர் கூட வழங்காத ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதை விட அனுபவமற்ற இளம் வீரர்களை வைத்து 5 கோப்பைகளை வென்ற சிறந்த கேப்டனாக அறியப்படும் ரோகித் சர்மா இந்திய அணியில் சுமாராக செயல்படுவதை எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் வீரர் முகமது கைப் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

INd vs Ban Shreyas Iyer Ebodad Hussain

இது பற்றி சமீபத்திய பேட்டில் அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் மிகவும் சுமாராக இருந்தது. ரோகித் சர்மாவிடம் இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர் நல்ல கேப்டன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவருடைய அணித்தேர்வு மற்றும் களத்தில் எடுக்கும் மாற்றங்கள் சுமாராக உள்ளது. குறிப்பாக வாசிங்டன் சுந்தர் 5 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை எடுத்து 1 பவுண்டரி கூட கொடுக்காமல் அசத்தலாக செயல்பட்டும் அவருக்கு மேற்கொண்டு ரோகித் சர்மா ஒரு ஓவர் கூட வழங்கவில்லை. மாறாக அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவர் வாய்ப்பு வழங்கினார்”

- Advertisement -

“குறிப்பாக அறிமுகப் போட்டியில் விளையாடிய குல்தீப் சென், தொடர்ச்சியாக விளையாடாமல் இருக்கும் தீபக் சஹர் ஆகியோரை நம்பி அவர்களுக்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினார். ஷார்துல் தாகூரும் தொடர்ச்சியாக விளையாடுவதில்லை. பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் இந்த அணியில் இல்லை. புவனேஸ்வர் குமார் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. ஆனால் பொதுவாக ரோகித் சர்மா அவருடைய நுணுக்கங்களுக்கு பெயர் போனவர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் இதை விட அனுபவமற்ற இளம் வீரர்களை வைத்துக்கொண்டு சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அவர் கேப்டன்ஷிப் செய்வார். இருப்பினும் இப்போட்டியில் அவர் ஏராளமான தவறுகளை செய்தார்”

IND vs BAN Rohit Sharma Liton Das

“இங்கேயும் இளம் பவுலர்கள் தான் இருக்கின்றனர். ஆனால் சிறப்பாக செயல்படும் ஒருவருக்கு கடைசி நேரத்தில் பந்து வீச அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை. காரணம் ஸ்பின்னர் என்றால் அடி வாங்கி விடுவார் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அந்த ஸ்பின்னர் அன்றைய நாளில் அற்புதமாக செயல்பட்டால் நீங்கள் ஏன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது.

இதையும் படிங்க : ஒத்துக்குறேன் பாகிஸ்தான் டீமே இப்படித்தான், தோல்விக்கு பின் ஒப்புக்கொண்ட – சோயப் அக்தர் பேசியது என்ன

மேலும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா பிட்ச்சில் பந்து நன்றாக சுழன்றதையும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசியதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக லிட்டன் தாஸ், சாகிப் அல் ஹசன் ஆகிய 2 தரமான வீரர்களை வாசிங்டன் சுந்தர் அவுட் செய்திருந்தார். ஆனால் கடைசியில் அவருக்கு ரோகித் சர்மா பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை” என்று கூறினார்.

Advertisement