ஒத்துக்குறேன் பாகிஸ்தான் டீமே இப்படித்தான், தோல்விக்கு பின் ஒப்புக்கொண்ட – சோயப் அக்தர் பேசியது என்ன

Akhtar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அடுத்ததாக சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியது. அதில் டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவில்பிண்டி நகரில் துவங்கிய முதல் போட்டியில் தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் சுமாராக பந்து வீசிய பாகிஸ்தான் இங்கிலாந்திடம் சரமாரியாக அடி வாங்கியது. குறிப்பாக முதல் நாளிலேயே 506 ரன்கள் விளாசி இரட்டை உலக சாதனைகளை படைத்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்தது.

James Anderson PAK vs ENG

- Advertisement -

அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 122, பென் டன்கட் 107, ஓலி போப் 108, ஹரி ப்ரூக் 153 என முக்கிய வீரர்கள் அதிரடியான ரன்களை குவித்தனர். அதை தொடர்ந்து நாங்களும் குறைந்தவர்கள் அல்ல என்ற வகையில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆமை செயல்பட்டதால் எவ்வளவோ போராடியும் 579 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அசாத் சபிக் 114, இமாம்-உல்-ஹக் 121, பாபர் அசாம் 136 என முக்கிய வீரர்கள் போராடி நல்ல ரன்கள் எடுத்தனர். அதை தொடர்ந்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து ஜோ ரூட் 73, ஹரி ப்ரூக் 87 என முக்கிய வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் 264/7 ரன்கள் எடுத்த போது தைரியமாக டிக்ளர் செய்து ஆச்சரியப்படுத்தியது.

செல்பிஷ் பாகிஸ்தான்:
ஏனெனில் தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் ஒன்றரை நாட்களில் 343 ரன்களை மனது வைத்து அதிரடியாக விளையாடினால் எளிதாக வென்று விடலாம் என்ற நிலையில் பாகிஸ்தான் இருந்தது. ஆனால் இமாம்-உல்-ஹக் 48, ஷாஹீல் 76, முகமத் ரிஸ்வான் 46 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்தாலும் அதை அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடாமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்கள். மறுபுறம் ரிஸ்க் எடுத்து பாகிஸ்தானை 268 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 22 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் வெற்றியை சுவைத்து 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

மொத்தத்தில் போராடியிருந்தால் கிடைத்திருக்கக்கூடிய வெற்றியை டிரா செய்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் விளையாடியதற்காக பாகிஸ்தானுக்கு படுதோல்வி பரிசாக கிடைத்தது. அந்த வகையில் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தைரியமில்லாமல் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் கடுமையான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் வெற்றி பெறுவதற்காக பாகிஸ்தான் அணி விளையாடவில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பாகிஸ்தான் வீரர்கள் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் விளையாடியதாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் இது போன்ற பிட்ச்கள் போட்டி டிராவில் முடிவடைய வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கும் அவர் நீண்ட நாட்கள் கழித்து தனது அணியின் தோல்வியை ஒப்புக்கொண்டு மனசாட்சியுடன் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் தங்களுக்கு கிடைக்க வாய்ப்பைக் கூட பயன்படுத்தவில்லை. இப்போட்டியில் வெல்ல இங்கிலாந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. ஆனால் பாகிஸ்தான் அதை எடுக்கவில்லை. அங்கே இரு அணிகளிடமும் வித்தியாசமான மனநிலை இருந்தது. குறிப்பாக 4வது நாளில் தைரியமாக இங்கிலாந்து டிக்ளேர் செய்த இடத்தில் இதுவே பாகிஸ்தானாக இருந்திருந்தால் டிக்ளேர் செய்திருக்குமா? நிச்சயம் செய்திருக்காது”.

ENG Joe Root Ben Sokes James Anderson

“மேலும் இங்கிலாந்தின் பயிற்சியாளர் மெக்கல்லம் அதிரடியாக விளையாடுவோம் என்று ஆரம்பத்திலேயே சொன்னார். ஆனால் 7 விக்கெட் கையில் இருந்த போது கூட பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்காக விளையாடவில்லை. அத்துடன் இப்போட்டியின் பிட்ச் ட்ரா செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது. அது தான் உங்களது எண்ணமாக இருந்தால் நீங்கள் எதை நோக்கி பயணிக்கிறீர்கள்? இது எனக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

இதையும் படிங்க : வீடியோ : உண்மையை சொன்ன ரசிகரை அடிக்க வெறிகொண்டு ஓடிய பாகிஸ்தான் வீரர் – என்ன நடந்தது?

ஏனெனில் இப்போட்டியை ட்ரா செய்வதை தடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து வழங்கியது. 350 ரன்கள் என்பது பெரிதல்ல. ஆனால் அங்கே பாகிஸ்தான் வீரர்கள் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு விளையாடினார்களே தவிர வெற்றி பெறும் அளவுக்கு விளையாடவில்லை. இதற்காக இளம் வீரர்களை குறை சொல்லவில்லை. அதே சமயம் இங்கிலாந்து வெல்வதற்கு தகுதியான அணியாகும்” என்று கூறினார்.

Advertisement