வீடியோ : உண்மையை சொன்ன ரசிகரை அடிக்க வெறிகொண்டு ஓடிய பாகிஸ்தான் வீரர் – என்ன நடந்தது?

Hasan Ali
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாளில் கத்துக்குட்டியிடம் தோற்றாலும் மற்றொரு நாளில் உலக சாம்பியனை தோற்கடிக்கும் திறமை கொண்ட கணிக்க முடியாத அணியாகவே பாகிஸ்தான் இருந்து வருகிறது. அதே போல் அதில் விளையாடும் வீரர்கள் நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் சில நேரங்களில் வேடிக்கையான நிகழ்வுகளில் ஈடுபடுவது வழக்கமாகும். பொதுவாக கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக செயல்படும் போது தலையில் வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் சுமாராக செயல்படும் போது எல்லை மீறி விமர்சிப்பது வழக்கமாகும். அது போன்ற சமயங்களை பொறுமையுடன் கையாள்வது கடமை என்றாலும் சில பாகிஸ்தான் வீரர்கள் ரசிகர்களிடம் அத்து மீறி நடந்து கொள்வது அந்த காலம் முதல் இந்த காலம் வரை தொடர்கிறது.

குறிப்பாக 90களில் ஒரு போட்டியில் கிண்டலடித்தார் என்பதற்காக முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹக் பேட்டை எடுத்துக்கொண்டு அந்த ரசிகரின் மண்டையை உடைக்க சென்றதை யாரும் மறக்க முடியாது. அந்த வரிசையில் தற்போதைய அணியில் விளையாடி வரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹசன் அலி இணைந்துள்ளார். ஆம் கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் லீக் சுற்றில் இந்தியாவை வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்து சரித்திரம் படைத்த பாகிஸ்தான் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று பரிதாபமாக வெளியேறியது. அப்போட்டியில் முக்கிய நேரத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ வேட் குறைவான ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை ஹசன் அலி தவற விட்டார்.

- Advertisement -

ரசிகருடன் சண்டை:
அதை பயன்படுத்திய அவர் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 41* (17) ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்தார். அந்த காலத்திற்கு மறக்க முடியாத தோல்வி இப்போதும் ஒவ்வொரு பாகிஸ்தான் ரசிகர்களின் மனதில் ஆணி அடித்தார் போல் உள்ளது. அந்த நிலைமையில் பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்க முடியாத ஹசன் அலி பஞ்சாப் மாவட்டத்தின் ஆரிப் வாலா எனும் இடத்தில் உள்ளூர் கிளப் கிரிக்கெட் தொடரில் விளையாடியிருக்கிறார்.

அப்போது டி20 உலக கோப்பையில் விட்ட அந்த கேட்ச்சை சுட்டிக்காட்டி ஒரு ரசிகர் அவரை மீண்டும் மீண்டும் கிண்டலடித்ததாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த அவர் உணர்ச்சியையும் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் வெறிகொண்ட வேங்கையாக மாறி அந்த ரசிகரை அடித்து நொறுக்குவதற்காக துரத்தி பிடித்து ஓடினார். இருப்பினும் அருகில் இருந்த சக அணி வீரர்கள் தடுத்து நிறுத்தியும் அதற்கு கட்டுக்கடங்காத அவர் ஒரு கட்டத்தில் சீறிப்பாய்ந்து அந்த ரசிகரை அடிக்க ஓடினார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் மைதானத்திற்குள் நுழைந்து சண்டையில் ஈடுபட்ட அவர்களை சுற்றி ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பயந்து போன ஹசன் அலி அவசர அவசரமாக மைதானத்திலிருந்து வேகமாக ஓடி வந்து வெளியேறினார். அப்போது தடுப்பு சுவர்களில் தட்டி கீழே விழுந்த அவர் துண்டை காணோம் துணியை காணோம் என்ற வகையில் வேகவேகமாக மைதானத்திற்கு வெளியே நின்ற தன்னுடைய காரில் வேகமாக ஓடி ஏறினார்.

அதே சமயம் தங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு ரசிகரை தாக்கி விட்டார் என்பதற்காக இதர ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்ட ஹசன் அலி தாம் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதையும் மறந்து ஒரு ரசிகருடன் இப்படி மோசமாக மோதிக் கொண்டது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

- Advertisement -

இதனால் நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து கிண்டலடித்து வருகிறார்கள். முன்னதாக கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபியின் தொடர் நாயகன் விருதை வெல்லும் அளவுக்கு ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருந்த அவர் சமீப காலங்களில் சுமாராக செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : அவருக்கு இருக்க டேலன்ட்டுக்கு அவர் இப்படி பண்றது எனக்கு பிடிக்கல – சுப்மன் கில் குறித்து கவாஸ்கர் கருத்து

அதனால் மீண்டும் அணிக்குள் நுழைவதற்காக இது போன்ற உள்ளூர் தொடரில் விளையாடி வரும் அவர் இப்படி மோசமான நன்னடத்தையுடன் நடந்து கொண்டது அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement