கே.எல் ராகுல் அந்த ஐ.பி.எல் அணிக்கு கேப்டனாக சென்றால் ரொம்ப நல்லா இருக்கும் – முகமது கைப் கருத்து

Kaif and KL Rahul
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டிசம்பர் இரண்டாம் வாரம் மினி ஏலமானது நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் இடம் மாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் டிரேடிங் முறையில் சில வீரர்களை தங்களது அணியில் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கே.எல் ராகுல் அந்த அணிக்கு கேப்டனாக சென்றால் நல்லா இருக்கும் : முகமது கைப்

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் மிகப்பெரிய டிரேடிங்கில் ஒன்றாக பார்க்கப்படும் கே.எல் ராகுலின் இடமாற்றம் தற்போது சூடு பிடித்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக 14 கோடி ரூபாய் என்கிற விலைக்கு வாங்கப்பட்ட கே.எல் ராகுல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதோடு தனக்கு கிடைத்த கேப்டன் பதவியை வேண்டாம் என்றும் தான் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட விரும்புவதாகவும் கூறி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்துள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி அணியில் இருந்து வெளியேறும் கே.எல் ராகுலை மினி ஏலத்திற்கு முன்னதாகவே வேறு அணிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கே.எல் ராகுல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக சென்றால் அது மிகச் சிறப்பான ஒரு முடிவாக அமையும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கே.எல் ராகுல் கொல்கத்தா அணியின் கேப்டனாக மாறினால் அது மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும்.

- Advertisement -

ஏனெனில் முன்னதாக அவர் லக்னோ அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணியின் நிர்வாகத்திற்கும் அவருக்கும் இடையே சரியான புரிதல் இல்லை. அப்படி புரிதல் இல்லாமல் கேப்டன் செயல்படும் பட்சத்தில் முடிவுகள் மோசமாகத்தான் அமையும். ஆனாலும் லக்னோ அணிக்காக அவர் ஒரே சீசனில் 500 ரன்கள் குவித்து அற்புதமாக பேட்டிங் செய்திருந்தார்.

கே.கே.ஆர் அணியை பொறுத்தவரை லக்னோ அணியை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில் கொல்கத்தா அணியில் ஆண்ட்ரே ரசல், சுனில் நரேன், குவிண்டன் டி காக், குர்பாஸ் போன்ற மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர். அதோடு திறமையான இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் கலந்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க : பவர்பிளே ஓவர்களில் 3 ஓவர்களை பும்ரா வீசுவது ஏன்? தெளிவான விளக்கத்தை கொடுத்த – கோச் கம்பீர்

எனவே கே.கே.ஆர் மாதிரி ஒரு அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதனை கே.எல் ராகுல் இருகரம் கூப்பி வரவேற்று அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி அவர் செயல்படும் பட்சத்தில் மிகச் சிறப்பான கேப்டனாகவும் ஐபிஎல் போட்டிகளில் செயல்பட முடியும் என முகமது கைப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement