ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இழந்திருந்த வேளையில் அந்த தொடருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
பும்ராவுக்கு பவர் பிளேவிலேயே 3 ஓவர்களை வழங்கியது ஏன்? : கவுதம் கம்பீர் விளக்கம்
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் 6 ஓவர்களில் தன்னுடைய 3 ஓவர்களை வீசினார். டி20 போட்டிகளில் துவக்கத்தில் இரண்டு ஓவர்களையும், பின்னர் கடைசி நேரத்தில் டெத் ஓவர்களில் 2 ஓவர்களையும் வீசுவதையே பும்ரா ஆண்டு ஆண்டு காலமாக வழக்கமாக வைத்திருந்தார்.
இந்திய அணியின் கேப்டன்களும் ஜஸ்ப்ரீத் பும்ராவை போட்டியின் துவக்கத்தில் இரண்டு ஓவர்களையும், கடைசி நேரத்தில் இரண்டு ஓவர்களையும் என இரண்டு ஸ்பெல்களாக பயன்படுத்தி வந்தனர். இவ்வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் இம்முறை பவர் பிளேவிற்குள் மூன்று ஓவர்களை வீசிய அவர் இறுதி நேரத்தில் ஒரு ஓவரை மட்டுமே வீசினார்.
இந்த டி20 தொடரை பொருத்தவரை 3 போட்டியில் விளையாடிய பும்ரா 6.58 எக்கனாமியுடன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக இப்படி பும்ரா பவர் பிளேவிற்குள் மூன்று ஓவர்களை வீசியது ஏன்? என்பது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
டி20 போட்டிகளை பொறுத்தவரை பேட்டிங் லைனில் தான் அதிரடி காட்ட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. பந்துவீச்சிலும் அதிரடியை கொண்டு வர நான் விரும்பினேன். எனவே பும்ராவிற்கு முதல் 6 ஓவர்களில் 3 ஓவர்களை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தேன். ஏனெனில் பேட்டிங்கில் அதிரடியாக செயல்படுவது மட்டுமின்றி பந்து வீச்சிலும் நாம் அதிரடியான துவக்கத்தை பெற வேண்டும்.
ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் 6 பவர்களில் 3 ஓவர்களை வீசும் பட்சத்தில் நம்மால் பவர்பிளேவில் பந்துவீச்சில் வெற்றிபெற முடியும். அதாவது பும்ரா 3 ஓவர்களை வீசும் பட்சத்தில் பவர்பிளேவில் எதிரணியால் அதிக ரன்களை குவிக்க முடியாது. அதோடு அந்த நேரத்தில் விக்கெட்டுகள் விழும் வாய்ப்பு இருக்கிறது. பின்னர் மிடில் ஓவர்களின் போது வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் இருப்பதினால் பும்ரா கொடுக்கும் அழுத்தம் காரணமாக இவர்களால் எளிதில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் நான் சந்தித்த கடினமான பவுலர் இந்த இந்திய பவுலர் தான் – ஹாசிம் அம்லா பதில்
பும்ரா கொடுக்கும் துவக்கம் மூலம் மிடில் ஓவர்களில் எதிரணியை அழுத்தத்தில் கொண்டு செல்ல முடியும். இப்படி ஒரு காரணத்தினால் தான் பும்ராவிற்கு முதல் 6 ஓவர்களிலேயே 3 ஓவர்களை வீசவைக்கும் திட்டத்தை கொண்டு வந்தோம். இது இந்திய அணிக்கு தற்போது வரை பயனுள்ளதாகவே இருந்து வருவதாகவும் கவுதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.



