முதல் பந்தில் இருந்தே ரொம்ப செட்டிலா ஆடுறாரு. இவரோட பேட்டிங் வேற லெவல் – முகமது கைப் புகழாரம்

Kaif
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல இளம் வீரர்கள் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணிக்காக அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி இன்று நடைபெற உள்ள 2வது டி20 போட்டியை கைப்பற்றி இந்த தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் அறிமுகமான சில இளம் வீரர்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் மற்றும் தேர்வாளர்கள் என அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளனர். அதன்படி இந்த ஒருநாள் தொடரில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி மூன்று போட்டிகளிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.

தான் விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த அவர் டி20 போட்டியிலும் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். விக்கெட்டுகள் விழக்கூடிய வேளையில் கூட அவர் களம் இறங்கினாலும் தனது சிறப்பான ஷாட்டுகள் மூலம் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடும் சூர்யகுமார் யாதவ் ரசிகர்கள் மத்தியில் இந்தியாவின் 360 என்றும் அழைக்கப்படுகிறார்.

sky

இந்நிலையில் அவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் பலரது பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் சூர்யகுமார் யாதவ் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வரும்போது விக்கெட்டுகள் விழுந்து இருந்தாலும் முதல் பந்தையே ஏற்கனவே பந்துகளை விளையாடி செட்டிலான பேட்ஸ்மேன்களை போல விளையாடுகிறார். அவருக்கு எந்த நேரத்திலும் எந்த விதமான பதற்றமோ சந்தேகமில்லாமல் மிகுந்த தெளிவுடன் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்கிறார்.

sky

உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு முதிர்ச்சியுடன் விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என புகழாரம் சூட்டியுள்ளார். ஏற்கனவே உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் தொடர் என தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த சூர்யகுமார் யாதவ் கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை நம்பிக்கை நட்சத்திரமாக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement