அவரோட பேட்டிங் வேறலெவல்ல மாறிடுச்சு. நிச்சயம் அவர் ஆஸ்திரேலிய சீரியஸ்க்கு அவசியம் – முகமது கைப் கருத்து

Kaif
- Advertisement -

அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தவறவிட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முடிந்த இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத்தந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

- Advertisement -

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அஷ்வினும், தொடர் நாயகனாக புஜாராவும் அறிவிக்கப்பட்டனர். ஆனால் இந்த தொடரில் சத்தமே இல்லாமல் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடிய விதம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவர் கட்டாயம் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்ற தனது கருத்தனையும் அவர் முன்வைத்து அந்த பதிவினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் :

- Advertisement -

நான்காவது நாள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சிக்கு சாதகமாக இருந்தது. அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களும் நான்காம் நாளில் ஆதிக்கம் செலுத்தி பந்தை நன்றாக டர்ன் செய்து வீசினர். ஆனால் அதையும் சமாளித்து ஷ்ரேயாஸ் ஐயர் மிக நேர்த்தியாக விளையாடினார். இப்படி ஒரு பேட்ஸ்மேன் மிகச் சிறப்பாக விளையாடும் போது அவரை அணியில் தொடர்ந்து நீடிக்க வைக்க வேண்டும்.

இதையும் படிங்க : 2022 சீசனில் நெட் பவுலர்களாக இருந்து 2023 ஐபிஎல் ஏலத்தில் நல்ல தொகைக்கு வாங்கப்பட்ட 5 வீரர்களின் பட்டியல்

அந்த வகையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய மண்ணில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவரது பார்ம் முக்கியமானதாக இருக்கும் என்றும் நிச்சயம் இந்திய அணிக்காக அந்த தொடரில் அவர் விளையாட வேண்டும் என்றும் முகமது கைஃப் தனது ஆதரவினை தெரிவித்து அந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement