2022 சீசனில் நெட் பவுலர்களாக இருந்து 2023 ஐபிஎல் ஏலத்தில் நல்ல தொகைக்கு வாங்கப்பட்ட 5 வீரர்களின் பட்டியல்

Mukesh Kumar
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் இந்தியாவில் நடைபெறும் நிலையில் அதற்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. அதில் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் ஆல் ரவுண்டர்களான சாம் கரண், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் ஆகியோர் 15 கோடிக்கும் மேல் வாங்கப்பட்டது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அது போக இந்த ஏலத்தில் வாங்கப்பட்ட அனைத்து வீரர்களுமே தங்களது கடின உழைப்பின் பரிசாக பல்வேறு அணிகளில் நல்ல விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். அந்த வகையில் நாட்டுக்காகவும் வாழ்வாதாரத்தை உயர்த்த இது போன்ற ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் உழைக்கும் போது முக்கிய அணிகளில் நெட் பந்து வீச்சாளராக செயல்படும் வாய்ப்பு பெறுவார்கள்.

அதில் அணி நிர்வாகங்களையும் நட்சத்திர வீரர்களையும் பயிற்சியாளர்களையும் கவரும் வகையில் செயல்பட்டால் நிச்சயம் முதன்மை அணியில் விளையாடு வாய்ப்பைப் பெற்று நாளடைவில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுப்பார்கள். அந்த வகையில் 2022 சீசனில் நெட் பந்து வீச்சாளராக பணியாற்றிய சில வீரர்கள் தங்களது கடின உழைப்பால் 2023 சீசனில் முதன்மை ஐபிஎல் அணிகளில் விளையாடும் அளவுக்கு நல்ல விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. நிஷாந்த் சிந்து: 2022 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இவர் இடது கை சுழல் பந்து வீச்சாளராகவும் பேட்ஸ்மேனாகவும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தினார். அதன் காரணமாக 2022 சீசனில் சென்னை அணியில் நெட் பந்து வீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இவர் தோனி போன்ற ஜாம்பவான்களுடன் செயல்படும் வாய்ப்பை பெற்றார்.

அதில் தோனியையும் பயிற்சியாளர்களையும் கவரும் வகையில் செயல்பட்ட காரணத்தால் இந்த ஏலத்தில் கொல்கத்தா அணியுடன் போட்டி போட்ட சென்னை 60 லட்சத்திற்கு அவரை வாங்கியுள்ளது. அதனால் 2023 சீசனில் முதன்மை சென்னை அணியில் இடம் பிடித்துள்ள அவர் விரைவில் விளையாடுவதை பார்க்கலாம்.

- Advertisement -

4. மோஹித் சர்மா: 2014 ஐபிஎல் தொடரின் ஊதா தொப்பியை வென்று 2015 உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடிய இவர் நாளடைவில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கழற்றி விடப்பட்டார். சமீப காலங்களில் ஐபிஎல் தொடரிலும் மோசமாக செயல்பட்ட அவரை கடந்த வருடம் குஜராத் அணியில் நெட் பவுலராக பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இருப்பினும் முதல் சீசனிலேயே கோப்பையை வெல்லும் அளவுக்கு பயிற்சி களத்தில் சிறப்பாக செயல்பட்டு குஜராத் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்த அவரை இந்த ஏலத்தில் 50 லட்சம் அடிப்படை விலையில் அந்த அணி வாங்கியுள்ளது.

- Advertisement -

3. குல்வந்த் கேஜ்ரோலியா: 30 வயதாகும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த சீசன்களில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளில் 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு பெங்களூரு அணியில் விளையாடிய அவர் அதன் பின் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய நிலையில் கடந்த சீசனில் கொல்கத்தாவின் நெட் பவுலராக செயல்பட்டார். அதில் கவரப்பட்ட கொல்கத்தா நிர்வாகம் இந்த ஏலத்தில் அவரை குறைந்த விலைக்கு முதன்மை அணியில் வாங்கியுள்ளது.

- Advertisement -

2. ஜோஸ் லிட்டில்: அயர்லாந்தை சேர்ந்த இளம் இடது கை வேகம் பந்து வீச்சாளரான ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி அனுபவம் கொண்டவர். அதனால் 2022 சீசனில் சென்னை அணியின் நெட் பவுலராக வாங்கப்பட்ட அவர் கொடுத்த வாக்குப்படி நடக்காத காரணத்தால் பாதியிலேயே வெளியேறியதாக தெரிவித்தார்.

இருப்பினும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 11 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அவரை 2023 சீசனுக்காக குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் 4.4 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

1. முகேஷ் குமார்: பெங்கால் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான இவர் சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்கநிக்கோலஸ் பூரனை 16 கோடிக்கு வாங்கியது ஏன்? மாஸ்டர் முடிவின் பின்னணியை பகிர்ந்த கெளதம் கம்பீரின் பதில் இதோ

அதில் வாய்ப்பு பெறாவிட்டாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணில் இடம் பிடிக்கும் அளவுக்கு முன்னேறிய அவரை டெல்லி அணி நிர்வாகம் 5.50 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. கடந்த சீசனில் டெல்லி அணியில் நெட் பந்து வீச்சாளராக அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியது அதற்கு முக்கிய காரணமாகும்.

Advertisement