ரிங்குவை விட்டாலும் மோர்கன் மாதிரியான அவரை விட்ராதிங்க.. கொல்கத்தாவின் 4 ரிட்டன்சன் பற்றி கைப் ஆலோசனை

Mohammad Kaif 3
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏல விதிமுறைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைக்க முடியும் அல்லது ஆர்டிஎம் பயன்படுத்தி ஏலத்திலும் வாங்க முடியும். அதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அந்த வரிசையில் நடப்புச் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல் ஆகிய ஆல் ரவுண்டர்களை கண்டிப்பாக தக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது. அதே போல இந்திய அணியின் வருங்கால ஃபினிஷராக பார்க்கப்படும் ரிங்கு சிங்கை கொல்கத்தா தக்க வைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தக்க வைக்கப்படுவாரா என்பது சந்தேகமாகும்.

- Advertisement -

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்:

ஏனெனில் சாதாரணமாகவே ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக பலவீனத்தைக் கொண்ட அவர் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடி பெரிய ரன்கள் குவிப்பதில்லை. போதாக்குறைக்கு 2024 துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் தொடரில் அவர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இந்நிலையில் ரிங்குவை விடுவித்தாலும் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா விட்டு விடக்கூடாது என முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

ஏனெனில் கௌதம் கம்பீரம் இருக்க மாட்டார் என்ற சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற அனுபவமிக்க கேப்டன் அவசியம் என்று தேர்விக்கும் ஃகைப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு அணி சாம்பியனாகும் போது நீங்கள் முதன்மை வீரர்களை தொடர விரும்புவீர்கள். எனவே கொல்கத்தா அதிகப்படியான வீரர்களை தக்க வைக்க விரும்புவார்கள். சிலரை ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்க விரும்புவார்கள்”

- Advertisement -

இயன் மோர்கன் மாதிரி:

“ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் அந்தளவுக்கு நன்றாக விளையாடவில்லை. ஆனால் கேப்டனாக அவர் சாம்பியன் பட்டத்தை வென்றது பெரிய விஷயம். கேப்டனாக அவர் சமீப காலங்களில் நல்ல முன்னேற்றத்தையும் சந்தித்துள்ளார். எனவே மற்ற வீரர்களை சரியாக வழி நடத்தி உங்களுக்கு கோப்பையை வென்று கொடுத்தால் அவர் முதல் வீரராக தக்க வைக்க தகுதியானவரே”

இதையும் படிங்க: டி20 கதையே வேற.. உலகக் கோப்பையில் மிஸ்ஸானதை இந்தியாவை வீழ்த்தி பிடிப்போம்.. வங்கதேச கேப்டன் சவால்

“2021 ஐபிஎல் தொடரில் ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற இயன் மோர்கனை அடுத்த வருடம் கொல்கத்தா கழற்றி விட்டது. அதனால் 2023 வரை கொல்கத்தா தடுமாறியது. எனவே ஸ்ரேயாஸ் ஐயரை வீரராக தக்க வைத்து கேப்டனாக தொடர வையுங்கள். அவரைத் தொடர்ந்து ஆண்ட்ரே ரசல், சுனில் நரேன், பிலிப் சால்ட் போன்ற 3 – 4 வீரர்களை கொல்கத்தா அணி தக்க வைக்கலாம். இன்னும் 2 வீரர்களை நீங்கள் ஏலத்தில் மீண்டும் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்க முடியும்” என்று கூறினார்.

Advertisement