வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. அதனால் பாகிஸ்தானை போல உங்களை வீழ்த்துவோம் என்று எச்சரித்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 7ஆம் தேதி குவாலியரில் துவங்குகிறது.
அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் டெஸ்ட் தொடரில் தாங்கள் சரியாக விளையாடாததால் தோற்றதாக வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ தெரிவித்துள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் போட்டி நாளன்று யார் அசத்துகிறார்களோ அவர்கள் தான் வெல்ல முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
டி20 கதையே வேற:
எனவே ஒரு பந்தில் மொத்த வெற்றியும் தலைகீழாக மாறக்கூடிய டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று சான்டோ மீண்டும் சவால் விடுத்துள்ளார். இது பற்றி தொடருக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் நாங்கள் இந்தத் தொடரை வெல்லப் பார்ப்போம். நாங்கள் அதிரடியான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்”
“கடந்த டி20 உலகக் கோப்பையில் நாங்கள் செமி ஃபைனலுக்கு செல்ல நல்ல வாய்ப்பிருந்தது. ஆனால் நாங்கள் அதைத் தவற விட்டோம். இருப்பினும் இது புதிய அணி. இந்தப் புதிய அணியில் இருக்கும் அனைவரும் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். டெஸ்ட் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது தெரியும். ஆனால் நாங்கள் அதிலேயே நின்றுக் கொண்டிருக்கவில்லை”
இந்தியாவை வீழ்த்துவோம்:
“டி20 வித்தியாசமான விளையாட்டு. இங்கே அன்றைய தினம் நன்றாக விளையாடுபவர்கள் தான் வெல்ல முடியும். இங்கே கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல. டி20 கிரிக்கெட்டில் அனுபவமிக்க வீரர்கள் அல்லது பெரிய வீரர்கள் என்ற வித்தியாசம் கிடையாது. போட்டி நாளில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் அசத்தும் அணியே வெல்லும்”
இதையும் படிங்க: 10 வருஷம் ஆச்சு.. இம்முறை மாத்துவோம்.. இந்தியாவை எங்க அடிக்குறதுன்னு முடிவு பண்ணல.. ஸ்மித் பேட்டி
“நாங்கள் அந்த அணியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது எங்களுக்கு முக்கியமான தொடர். அதில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. முதல் போட்டி நடைபெறும் குவாலியர் பிட்ச் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இங்கே பயிற்சிகளை செய்து விரைவாக நாங்கள் எங்களை சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்வோம்” என்று கூறினார்.



