- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவின் அதிர்ஷ்டம்.. கலை தெரிஞ்ச பும்ரா இல்லையேன்னு.. எதிரணிகள் கடவுளுக்கு நன்றி சொல்லுங்க.. ஃகைப்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிநாயகனாக செயல்பட்டு வருகிறார். லீக் சுற்றில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருது வென்று சாதனை படைத்த அவர் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சூப்பர 8 போட்டியில் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆப்கானிஸ்தானை 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா எளிதாக வென்றது. ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஓமர்சாய் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

கைப் பாராட்டு:
அந்த வகையில் இந்தப் போட்டியில் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட வெறும் 7 ரன்கள் மட்டும் கொடுத்த பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார். இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் விளையாடாததற்காக இங்கிலாந்து போன்ற எதிரணிகள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று முகமது தெரிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.

“2022 டி20 உலகக் கோப்பையில் பும்ரா இல்லை என்பதற்காக இந்தியாவின் எதிரணிகள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியால் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அதன் பின் காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த பும்ரா 2023 உலகக் கோப்பையில் விளையாடினார். அத்தொடரில் இந்தியா ஃபைனல் வரை சென்றது”

- Advertisement -

“இந்தத் தொடரிலும் நியூயார்க் மைதானத்தில் விக்கெட்டுகளை எடுத்த அவர் இப்போட்டியில் ஸ்விங் இல்லாத ஸ்லோவான பிட்ச்சில் ஸ்லோ மற்றும் கட்டர் பந்துகளை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை அவுட்டாகினார். அவரை அடிப்பதற்காக குர்பாஸ் நகர்ந்து சென்றார். ஆனால் அப்போது ஆக்சனை மாற்றாத பும்ரா மெதுவான பந்தை வீசினார். அதை சந்திக்க சென்ற குர்பாஸ் நன்றாக விளையாடாமல் கேட்ச் கொடுத்தார்”

இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பையில் லெஜெண்ட் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்.. புதிய உலக சாதனை

“அந்த வகையில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பந்து வீசும் கலை பும்ராவிடம் இருக்கிறது. வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் பாபர் அசாமை அவுட்டாக்கி ரிஸ்வானை கிளீன் போல்ட்டாக்கிய அவர் இப்திகார் அகமதை யார்க்கர் பந்தால் காலி செய்தார். எனவே அவர் வித்தியாசமாக பவுலிங் செய்கிறார். பும்ராவைப் போன்ற பவுலர் உங்களுக்கு கிடைக்க மாட்டார். அவரைப் போன்றவர் கிடைத்ததற்கு இந்தியர்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இந்தியா உலகக்கோப்பை வெல்வதில் அவர் முக்கிய பங்காற்றுவார். நன்றி பும்ரா” என்று கூறினார்.

- Advertisement -