ரோஹித்தை அவுட் ஆக்க இந்த 2 வழி போதும். அசால்ட்டா அவுட் ஆக்கிடலாம் – முகமது அமீர் பேட்டி

Amir
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது அமீர் தனது இளம் வயதிலேயே சிறப்பான பந்து வீச்சின் மூலம் அபாயகரமான பந்துவீச்சாளராக திகழ்ந்தார். மிக இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் தனது வருகையை அவர் பதிவு செய்ததால் நிச்சயம் மிகப் பெரிய ஜாம்பவான் பவுலராக வருவார் என்ற நிலையில் சூதாட்டத்தில் சிக்கி அவரது வாழ்க்கையை பாழ் படுத்திக்கொண்டார்.

Amir

- Advertisement -

பின்னர் தடையில் இருந்து மீண்ட அவர் எப்படியோ போராடி 2017ஆம் ஆண்டு மீண்டும் கம்பேக் கொடுத்து சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது இந்திய அணியை சாய்த்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். இப்படி சிறப்பான பந்துவீச்சை மீண்டும் அளித்தும் அவர் அணியிலிருந்து ஒதுக்கப்பட்டதால் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது ஓய்வினை திடீரென அறிவித்தார்.

29 வயதாகும் அவர் விரைவிலேயே ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் அவர் தான் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இங்கிலாந்து சென்று இங்கிலாந்து குடிமகனாக மாறி ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் அதிரடி வீரரான ரோகித் சர்மாவை சுலபமாக தன்னால் வீழ்த்த முடியும் என்றுகூறியுள்ளார்.

Rohith

மேலும் ரோஹித்தை எளிதில் வீழ்த்த வேண்டும் என்றால் இந்த இரண்டு வழிகள் போதும் என்றும் அவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவிற்கு எப்பொழுதும் இடதுகை பவுலர்கள் மூலம் சிரமத்தை ஏற்படுத்த முடியும். அதுவும் இடது கை பவுலர்கள் வீசும் இன் ஸ்விங் பந்து வீச்சில் ரோகித் சர்மாக்கு சிரமத்தை ஏற்படுத்த முடியும். அதேபோன்று சற்று வேகமாக வீசும் அவுட் ஸ்விங் பந்தில் ரோகித் சர்மா தடுமாறுவார் இதைக்கொண்டு நிச்சயம் ரோகித் சர்மாவை எளிதாக வீழ்த்தலாம் என்று அவர் பேசியுள்ளார்.

மேலும் பிரசர் சூழ்நிலைகளில் தனக்கு எப்போதும் பந்துவீச பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 119 விக்கெட்டுகளையும், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளையும், 50 டி20 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement