டி20 கிரிக்கெட்டில் உலகின் பெஸ்ட் பவுலர்ன்னா அது இந்திய வீரரான இவர்தான் – முகமது ஆமீர் புகழாரம்

Amir
- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதனால் சில போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களுக்கு சென்று சிரமப்படுவார்கள். மேலும் எப்பேர்பட்ட பவுலர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு போட்டியில் பேட்ஸ்மேன்களிடம் நிச்சயம் அடி வாங்குவார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பந்துவீச்சாளராகவும் ரன்களை குறைத்து வழங்கும் மிகச்சிறந்த பவுலராகவும் இந்திய வீரர் ஒருவர் திகழ்கிறார் என்று பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.

Amir

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது டி20 கிரிக்கெட்டில் உலகின் மிகச் சிறந்த பவுலராக நான் இந்திய வீரரான பும்ராவை குறிப்பிடுகிறேன். ஏனெனில் அவரால் பவர் பிளே-ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. அதேபோன்று டெத் ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்த முடிகிறது. அவருடைய யார்க்கர் மிகவும் துல்லியமாக இருக்கிறது.

உலகின் பல்வேறு சிறப்பான பேட்ஸ்மேன்களை அவரது வேகத்தினாலும், துல்லியத்தாலும் வீழ்த்தியுள்ளார். அதேபோன்று பாகிஸ்தான் பவுலரான ஷாஹீன் ஷா அப்ரிடியும் சிறப்பான பவுலர் தான். ஆனால் அவரை பும்ராவுடன் ஒப்பிடுவது தவறு. ஏனெனில் ஷாகின் அப்ரிடி தற்போது தான் அவரது கிரிக்கெட் கேரியரை ஆரம்பித்துள்ளார்.

Bumrah-2

அவர் மிகவும் இளம் வீரர் அதுமட்டுமின்றி தற்போது தான் சில நுணுக்கங்களை கற்று வருகிறார். பாகிஸ்தான் அணியில் அவர் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தாலும் பும்ராவுடன் ஒப்பிடுகையில் பும்ரா தான் பெஸ்ட் பவுலர் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஷாஹீன் அப்ரிடி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் பல ஆண்டுகளாக பும்ரா டெத் ஓவர்களில் பிரமாதமாக பந்து வீசுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இப்போவும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. உலகக்கோப்பையை ஜெயிக்கப்போவது இந்த அணிதான் – பிரெட் லீ

என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் துல்லியமும் வேகமும் நிச்சயம் எளிதில் ரன் குவிக்க முடியாத வகையில் உள்ளது. ஷாஹீன் அப்ரிடி புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்தாலும் அவரது ஓவரில் எளிதாக ரன்கள் கசிகிறது. இதன் காரணமாக நிச்சயம் தற்போதுள்ள கிரிக்கெட்டில் பெஸ்ட் t20 பவுலர் என்றால் அது பும்ரா தான் என அமீர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement