இப்போவும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. உலகக்கோப்பையை ஜெயிக்கப்போவது இந்த அணிதான் – பிரெட் லீ

Lee
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை போட்டிகளானது நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்து தற்போது சூப்பர் 12-போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 151 ரன்கள் மட்டுமே குவித்தது.

pak

அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் தற்போது பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதில் பிரகாசமான வாய்ப்பு உண்டாகியுள்ளது.

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்ததால் அரையிறுதிக்கு முன்னேறுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறுகையில் : இப்போதும் நான் சொல்கிறேன் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

rohith

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முகமது ஷமி புவனேஷ்வர் குமார் போன்றவர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் போனது. என்னை பொறுத்தவரை அன்றைய நாள் பாகிஸ்தான் அணியின் நாளாக அமைந்தது. இந்திய அணியின் தேர்வை குறை சொல்ல முடியாது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. இருப்பினும் அன்றைய நாள் மோசமாக அமைந்ததன் காரணமாக இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க : போட்டி துவங்கும் முன்னர் அணியில் இருந்து விலகிய டி காக் – நடவடிக்கை எடுக்கவுள்ள தெ.ஆ நிர்வாகம்

கோலி சிறப்பாக செயல்பட்டார். ராகுல் ஐபிஎல்லில் விளையாடிய விதத்தை யாரும் மறந்து விட முடியாது. நிச்சயம் எனக்கு நம்பிக்கை உள்ளது இந்த தோல்வியிலிருந்து இந்திய அணி மீண்டு வந்து இறுதிப் போட்டியில் விளையாடும். எனது கணிப்பின்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என பிரட் லீ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement