போட்டி துவங்கும் முன்னர் அணியில் இருந்து விலகிய டி காக் – நடவடிக்கை எடுக்கவுள்ள தெ.ஆ நிர்வாகம்

Dekock
Advertisement

அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை தொடரானது தகுதிச்சுற்று போட்டிகளை தொடர்ந்து தற்போது சூப்பர் 12-சுற்றிற்குள் நுழைந்து உள்ளது. ஏற்கனவே இந்த சூப்பர் 12-சுற்றில் சில போட்டிகள் நடைபெற்று முடிந்த வேளையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

rsa

இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 143 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய சவுத் ஆப்பிரிக்கா அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி துவங்கும் முன்னர் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான டி காக் திடீரென விலகினார்.

- Advertisement -

இந்நிலையில் போட்டி துவங்கும் முன்னர் திடீரென டி காக் விலகிய விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஏனெனில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த போட்டியில் டி காக் விளையாடவில்லை என்று கூறினார். தற்போது அவர் ஏன் விலகினார் என்பதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

bauma

அதன்படி நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த உலகக் கோப்பை போட்டிகள் துவங்கும் முன்னர் எந்த அணி விளையாடினாலும் மைதானத்தில் மண்டியிட்டு ஒரு கை தூக்கி இனவெறிக்கு எதிரான தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்து அணி வீரர்களும் போட்டிக்கு முன்பு மண்டியிட்டு “Black Lives Matter” விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில் டி காக் அந்த செயலுக்கு உடன்படவில்லை என்று தெரிகிறது.

rsa 1

இதன் காரணமாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரபூர்வ தகவலை ட்விட்டர் பக்கத்தின் மூலமாக வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக நிச்சயம் டிகாக் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

Advertisement