இவருக்கு பந்துவீசும் போது தான் கடினமாக இருக்கும்..! இந்திய வீரர் யார் தெரியுமா..!

- Advertisement -

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். மேலும், இவரது சாதனைகளை போற்றும் வகையில் சமீபத்தில் பி சி சி ஐ 2017-2018 ஆம் ஆண்ற்கான ‘பாலி உல்மீகர்’ விருதும் கோலிக்கு வழங்கியது. இந்நிலையில் தந்தையாக இருப்பதை விட கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினம் என்று பாகிஸ்தான் பந்து வீச்சாளர் மொஹமத் அமீர் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தான் வீரரான மொஹமத் அமீர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். மேலும், தற்போது பாகிஸ்தான்- ஜிம்பாபே- ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் முத்தரப்பு டி20 தொடரிலும் பங்குபெற்றுள்ளார். கடந்த 2010 ஆம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபடத்திற்காக அமீர் 5 ஆண்டுகள் சிறை தண்டனையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மொஹமத் அமீர் கூறியதாவது “எனக்கு லாராவிற்கு பந்து வீச வேண்டும் என்பது தான் ஆசை. அவரது வீடியோ பார்க்கும் போதெல்லாம், அவர் தான் கிரிக்கெட் உலகில் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்று நினைத்திருக்கிறேன். மேலும், ஒரு தந்தையாக இருப்பதை விட இந்திய கிரிக்கெட் வீரர் கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினம் ” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அமீர் “எனக்கும் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஹட் ட்ரிக் விக்கெட் எடுக்க வேண்டும் என்பது தான் ஆசை” என்று தெரிவித்துள்ளார். அதே போல கிரிக்கெட் உலகத்தில் நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கின்ற ஆசை எது என்ற கேள்விக்கு “நோ பாலிற்கு பிரீ ஹிட் இருக்க கூடாது என்பது தான் அது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Advertisement