அடுத்த சில போட்டிகளில் சென்னை அணியின் முன்னணி வீரரான இவர் ஆட வாய்ப்பில்லையாம் – அதிர்ச்சி தகவல் இதோ

moeen-ali-1
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சிஎஸ்கே அணிக்கு அவ்வளவு குதூகலமான தொடராக அமையவில்லை என்று கூறலாம். ஏனெனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டும் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக செல்லும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஆரம்பத்திலிருந்து சென்னை அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் 6 தோல்விகளை சந்தித்து உள்ளதால் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு பறிபோகியுள்ளது என்றே கூறலாம்.

CSK vs RCB 2

- Advertisement -

கடந்த ஆண்டு இருந்த சென்னை அணிக்கும் இந்த ஆண்டு உள்ள சென்னை அணிக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இல்லை என்றாலும் சென்னை அணியின் செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ரீடெயின் செய்யப்பட்ட வீரர்களான ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகியோரது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

ஏற்கனவே தீபக் சாகர் அணியில் இல்லாததால் தான் சென்னை அணி பெரிய சரிவை சந்தித்து வருகிறது என்று அனைவரும் கூறிவரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீரராக ரீடெயின் செய்யப்பட்ட வீரரான மொயின் அலி காயம் காரணமாக அடுத்து சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

moeen ali 2

ஏற்கனவே மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளை காயம் காரணமாக தவறவிட்ட மொயின் அலி தற்போது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்ததாக மேலும் சில போட்டிகளை அவர் தவற விடப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் தற்போது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

ஏனெனில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயின் அலி சென்னை அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து சரிவை சந்திக்கும்போதெல்லாம் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் ரன் சேர்த்து வலுப்படுத்துவார். அதோடு மிடில் ஓவர்களில் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தும் இவர் பந்துவீச்சிலும் கைகொடுக்கக்கூடியவர் என்பதால் சென்னை அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.

இதையும் படிங்க : 6 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் தொடரில் இடம் பிடித்த ரிஷி தவான் – அதற்காக அவர் பட்ட கஷ்டம் என்ன தெரியுமா?

இந்நிலையில் மொயின் அலிக்கு இப்படி காயம் ஏற்பட்டுள்ளது சென்னையின் ரசிகர்களிடையே பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 போட்டிகளாக மொயின் அலி இடம்பெறாததால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து வீரர் மிட்சல் சாண்ட்னர் அவரது இடத்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement