டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட அழைத்த இங்கிலாந்து கோச் – மொயின் அலி அளித்த பதில்

Moeen
- Advertisement -

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயின் அலி கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 112 ஒருநாள் போட்டிகள் மற்றும் 49 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றளவும் இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நட்சத்திர வீரராக விளையாடி வரும் மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

Moeen

மேலும் குறுகிய ஓவர் போட்டிகளில் அதிக அளவு கவனம் செலுத்தவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார். மேலும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரூட் மற்றும் பயிற்சியாளராக இருந்த சில்வர் வுட் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் அதையெல்லாம் மறுத்த மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட் போன்ற பெரிய போட்டிகளில் விளையாடும் ஆர்வத்தை இறந்துவிட்டதாக தெளிவான விளக்கத்தை அறிவித்திருந்தார். அதோடு அடிக்கடி காயம் ஏற்படுவதும், வாய்ப்பு கிடைக்காமல் போனதும் தான் நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிக்க காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

Moeen-Ali

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக பதவியேற்றுள்ள பிரண்டன் மெக்கலம் அவரை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த அழைப்புக்கு பதிலளித்து பேசிய மொயின் அலி கூறுகையில் :

- Advertisement -

நான் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வந்தால் அது ஜேக் லீச்சை அவமானப்படுத்தும் வகையில் இருக்கும். அதோடு அவருக்கு இன்னும் நிறைய ஆதரவு தரவேண்டும். எனவே இப்போது நான் அணியில் திரும்பினாலும் தேவையில்லாத அழுத்தம் தான் ஏற்படும் என்று கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது எனக்கும் மெக்கலத்துக்கும் நல்ல நட்பு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அர்ஜுன் டெண்டுல்கருக்கு இறுதி வரை வாய்ப்பு கிடைக்காதது ஏன் – மும்பை பவுலிங் கோச் பதில்

அதன்காரணமாகவே தற்போது அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மொயின் அலி கூறியுள்ளார். இருப்பினும் மொயின் அலி அளித்துள்ள இந்த பதிலின் படி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement