அர்ஜுன் டெண்டுல்கருக்கு இறுதி வரை வாய்ப்பு கிடைக்காதது ஏன் – மும்பை பவுலிங் கோச் பதில்

bond
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரில் மும்பை அணியானது வழக்கத்திற்கு மாறாக படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்தை பிடித்து வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியானது இம்முறை இந்த அளவிற்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

Mumbai Indians MI

- Advertisement -

அந்த அளவிற்கு படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் இந்த தொடரின் பாதியிலேயே பிளே ஆப் சுற்றின் வாய்ப்பை இழந்தனர். அதனை தொடர்ந்து மும்பை அணியில் உள்ள வீரர்களின் தேர்வு பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. அதோடு சீனியர் வீரர்களை தாண்டி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தது.

அந்த வகையில் மும்பை அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் இறுதிவரை சச்சினின் மகனான அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் சச்சின் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஷேன் பான்ட் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Arjun

மும்பை அணியில் பல திறமையான வீரர்கள் இருந்தும் இந்த தொடர் முடிவடையும் போது தான் அவர்கள் கிளிக் ஆகினர். எங்கள் அணியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகம் இருந்தது. ஆனால் அவர்கள் அனைவருமே தொடரின் இறுதியிலேயே க்ளிக் ஆகினர். இதனால் இந்த அணியை தயார் செய்வதற்கு ரோகித்சர்மா சற்று சிரமப்பட்டார்.

- Advertisement -

தொடரின் முடிவில் தற்போது மும்பை அணி சரியான அணியை பெற்றுள்ளதாக நினைக்கிறோம். நிச்சயம் அடுத்த ஆண்டு மும்பை அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அதோடு அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களும் தற்போது நல்ல அனுபவத்தை பெற்றுள்ளதால் அடுத்த ஆண்டு சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து அவர் பேசுகையில் :

இதையும் படிங்க : புஜாரா வந்துட்டாரு, இனிமேல் சதமடித்தால் தான் உங்களுக்கு சான்ஸ் கிடைக்கும் – இளம் வீரருக்கு அஷாருதீன் அட்வைஸ்

அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் இல்லாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் இன்னும் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். அந்த இரண்டு வகையிலும் அவர் தனது தரத்தை மேம்படுத்திக்கொண்ட பின்னர் நிச்சயம் அவருக்கு இனி வரும் தொடர்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று ஷேன் பான்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement