அவரோட இடத்தை நிரப்புவது கஷ்டம் தான்.. ஆனாலும் சூப்பரா ஆடிட்டேன் – மொயின் அலி மகிழ்ச்சி

Moeen Ali
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த மொயின் அலி கடந்த 2024-ஆம் ஆண்டு இறுதியில் சென்னை அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட வேளையில் நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலத்தில் அவரை கொல்கத்தா அணி விலைக்கு வாங்கியிருந்தது. அந்த வகையில் இந்த தொடரின் முதல் போட்டியில் வாய்ப்பினை பெறாத அவர் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது சுனில் நரேன் காய்ச்சல் காரணமாக விளையாட முடியாத சூழலில் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார். அப்படி தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அவரோட இடத்தை நிரப்புவது உண்மையில் கஷ்டம் தான் : மொயின் அலி

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய கொல்கத்தா அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய மொயின் அலி 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 5 ரன்களை மட்டுமே அடித்திருந்தாலும் பந்துவீச்சில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசியிருந்த மொயின் அலி பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் இந்த தொடருக்காக மிகச் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வந்தேன். இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாகவே என்னிடம் சுனில் நரேனுக்கு காய்ச்சல் உள்ளதால் நீங்கள் விளையாடப்போகிறீர்கள் என்று கூறினார்கள். சுனில் நரேன் போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனாலும் நான் அந்த பணியை சிறப்பாக செய்துள்ளதாக நினைக்கிறேன்.

இந்த மைதானத்தில் எனது பந்துவீச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது என்பதால் எனக்கு பந்து வீசுவதற்கு ஏதுவாக இருந்தது. கொல்கத்தா அணியில் நல்ல வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக வெளிநாட்டு வீரர்களான நரேன், ரசல், குவிண்டன் டி காக் போன்றோர் தொடர்ச்சியாக அணியில் இடம் பிடிப்பார்கள் என்பதனால் எனக்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும் ஆனாலும் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட உழைத்து வருகிறேன்.

- Advertisement -

இந்த போட்டியின் போது ஆர்ச்சர் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடியது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் இவ்வளவு விரைவாக பந்துவீசும் அவருக்கு எதிராக நான் எப்போதும் விளையாடி கிடையாது. அவருக்கு எதிராக முதல்முறை விளையாடியது ஒரு புது அனுபவத்தை தந்தது என மொயின் அலி கூறினார்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரேன் விளையாடாதது ஏன்? – காரணம் இதோ

நேற்றைய போட்டி நடைபெற்று முடிந்த பின்னர் தங்களது வெற்றி குறித்து பேசியிருந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே மொயின் அலியின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். அதாவது பேட்டிங்கில் மொயின் அலி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்களது அணியின் வெற்றிக்கு உதவினார் என்று ரஹானே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement