கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுனில் நரேன் கடந்த பல ஆண்டுகளாகவே அந்த அணிக்காக மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது கூட கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற மிக முக்கியமான காரணமாகவும் சுனில் நரேன் திகழ்ந்திருந்தார். ஏனெனில் கடந்த ஆண்டு துவக்க வீரராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
சுனில் நரேன் விளையாடாதது ஏன்? :
அவரது இந்த சிறப்பான ஆல்ரவுண்டர் செயல்பாடு காரணமாகவே அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதனை தொடர்ந்து 2025-ஆம் ஆண்டிற்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா அணியால் அவர் ஒரு பெரிய தொகைக்கு தக்கவைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக மொயின் அலி விளையாடியிருந்தார். கடந்த பல ஆண்டுகளாகவே கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் சுனில் நரேன் இப்படி திடீரென வெளியேற்றப்பட்டு அவருக்கு பதில் மொயின் அலி கொண்டுவரப்பட என்ன காரணம்? என்பது குறித்த கேள்வயும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இந்நிலையில் அதற்கான விளக்கத்தை நேற்றைய டாசின் போதே ரஹானே வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில் ரஹானே கூறுகையில் : இந்த போட்டியில் விளையாடும் அளவிற்கு சுனில் நரேன் நல்ல நிலையில் இல்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் தான் இந்த போட்டியை தவற விடுகிறார் என்றும் தெளிவாக விளக்கத்தை அளித்திருந்தார்.
இருப்பினும் சுனில் நரேனுக்கு ஏற்பட்டுள்ள இந்த காய்ச்சல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் விரைவில் அவர் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது. சுனில் நரேனுக்கு பதிலாக இடம்பிடித்திருந்த மொயின் அலி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 4 ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கிய 2 விக்கெட்டுகளை சாய்த்து இருந்தார்.
இதையும் படிங்க : ரிஸ்வான் மாதிரி கேட்டா அவுட்டைக் கூட தரமாட்டாங்க.. அம்பயர் முன் பாக் கேப்டனை கலாய்த்த.. இஷான் கிசான்
அதேபோன்று துவக்க வீரராக களமிறங்கிய அவர் பேட்டிங்கில் 12 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்து இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடிய வந்த அவர் சென்னை அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பின்னர் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



