இந்திய அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களில் தோல்வியை தழுவ இதுதான் காரணம் – மொயின் அலி கருத்து

Moeen Ali
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றிய பின்னர் அவருக்கு பிறகு வந்த எந்த ஒரு கேப்டனாலும்ம் ஐசிசி தொடர்களை வெல்ல முடியாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்திய அணி ஐசிசி உலக கோப்பையை ஜெயித்து பல ஆண்டுகள் ஆகிய வேளையில் இந்த ஆண்டாவது டி20 உலக கோப்பையை கைப்பற்றி விருந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

IND-Team

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இந்த டி20 உலக கோப்பை தொடரையும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது அணியின் மீது பல்வேறு விமர்சனங்களை கொண்டு வந்துள்ளது. அதே வேளையில் கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறிய இங்கிலாந்து அணியானது அதன் பின்னர் இயான் மோர்கனின் தலைமையில் மிகப்பெரிய எழுச்சியை கண்டு 2019-ஆம் ஆண்டு மோர்கனின் தலைமையில் 50 ஓவர் உலககோப்பையை கைப்பற்றியது.

அதன் பின்னர் ஜாஸ் பட்லரின் தலைமையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையும் கைப்பற்றி ஒரே சமயத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரையும் வென்று சாதித்துள்ளது. இப்படி இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக உலக கோப்பைகளை கைப்பற்றுவது குறித்தும், இந்திய அணி உலக கோப்பையை தவறவிடுவது குறித்தும் பேசியுள்ள இங்கிலாந்து வீரர் மொயின் அலி கூறுகையில் :

IND vs NED Rohit Sharma Axar Patel KL Rahul

இங்கிலாந்து அணியில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் கேப்டன் இயான் மோர்கன் தான். அவரது தலைமையில் நாங்கள் அனைத்து அணிக்கும் எதிராக எங்களது ஆதிக்கத்தை செலுத்தி அதிரடியாக விளையாட கற்றுக் கொண்டோம். பல ஆண்டுகளுக்கு முன்னர் 90-களில் ஆஸ்திரேலியா எவ்வாறு விளையாடுகிறதோ அதே போன்று விளையாட வேண்டும் என்று மற்ற அணிகள் முயற்சித்தன.

- Advertisement -

ஆனால் இயான் மோர்கன் எங்களுக்குள் புகுத்திய அதிரடியை தற்போது எங்களை பார்த்து பல அணிகள் அதேபோன்று விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு இங்கிலாந்து அணி தற்போது பலம் பெற்றுள்ளது என மொயின் அலி கூறியுள்ளார். மேலும் இந்திய அணி குறித்து பேசிய அவர் : ஐசிசி தொடர்களில் உள்ள பிரஷர் என்பது வேறு. அதனை சரியான கண்ணோட்டத்துடன் சமாளிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இங்கிலாந்து வீரர்கள் பிரஷராக இருந்தாலும் போட்டியில் அதிரடியை காண்பித்து திறம்பட செயல்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே விளையாடுவதால் எங்களால் கோப்பையை கைப்பற்ற முடிகிறது.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் இப்போ இருக்குற ஃபார்முக்கு நம்ம டீம் அதை செய்ஞ்சே ஆகனும் – தமிழக வீரர் அஷ்வின் ஆதரவு

அதேவேளையில் ஐசிசி தொடர்களில் இந்திய அணி ஒவ்வொரு முறை விளையாடும் போதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன், பிரஷரோடு விளையாடுவதாலே அவர்களால் உலக கோப்பையை தொட முடியாமல் போகிறது என மொயின் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement