சஞ்சு சாம்சன் இப்போ இருக்குற ஃபார்முக்கு நம்ம டீம் அதை செய்ஞ்சே ஆகனும் – தமிழக வீரர் அஷ்வின் ஆதரவு

Samson-and-Ashwin
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியது. அதோடு சஞ்சு சாம்சனை அணியில் நிரந்தரமாக சேர்க்க வேண்டும் என்றும் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அவர் இடம் பெற்று இருந்தாலும் அவர் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டார். அந்த விடயமும் சமூக வலைதளத்தில் அதிக அளவு பேசப்பட்ட விடயமாக மாறியது.

Samson

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதும், சொதப்பலாக விளையாடும் சில வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதும் பெரிய கேள்வியை எழுப்பியது. இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் அவர் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

அதன்படி இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 36 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னணி வீரரும், தமிழக சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

samson

இது குறித்து அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் இப்படி தனது உச்சகட்ட பார்மில் இருக்கும் போது அவருக்கான வாய்ப்புகளை இந்திய அணி தொடர்ந்து வழங்க வேண்டும். ஏனெனில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் அவர் மிகப்பெரிய வீரராக நிரந்தர இடம் பிடிப்பார்.

- Advertisement -

அவரை போன்ற திறமையான வீரர் அணியில் விளையாடவில்லை என்றால் நிச்சயம் அவர் இந்தியா முழுவதும் வெளிப்படையாக ட்ரெண்ட் ஆவார். அவருக்கான ஆதரவும் மக்களின் மத்தியில் குவியும். என்னை பொறுத்தவரை இந்திய அணி விளையாடும் எல்லா போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : IND vs NZ : முக்கிய நேரத்தில் வந்து இந்தியாவை துவம்சம் செய்த டாம் லாதம் – 23 வருட சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை

அந்த அளவிற்கு அவர் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று அஷ்வினும் தனது ஆதரவினை வெளிப்படையாக தெரிவித்து சஞ்சு சாம்சன் பற்றி பேசியுள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement