CSK vs LSG : தோனிக்கு யார் யாரை எப்போ யூஸ் பண்ணனும்னு நல்லா தெரியும் – ஆட்டநாயகன் மொயின் அலி பேட்டி

Moeen Ali 1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியானது நேற்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அனியானது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

CSK vs LSG

- Advertisement -

அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் தங்களது அணி பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது ருதுராஜ் மற்றும் கான்வே ஆகியோரது சிறப்பான துவக்கம் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது.

குறிப்பாக முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் 110 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கத்தை அளித்தனர். பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களும் மிகச் சிறப்பான ஆட்டத்தை விளையாட சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Moeen Ali

இந்த போட்டியில் பேட்டிங்கில் 13 பந்துகளில் 19 ரன்கள் குவித்த மொயின் அலி பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற மொயின் அளி இந்த போட்டியில் தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசுகையில் கூறியதாவது : லக்னோ அணியில் பெரிய ஹிட்டர்ஸ் இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசுவது போன்றே பந்து வீசினேன். பந்து நன்றாகவும் ஸ்பின் ஆனது அதனால் விக்கட்டுகளும் கிடைத்தது.

இதையும் படிங்க : CSK vs LSG : சி.எஸ்.கே அணிக்கெதிரான இந்த தோல்விக்கு காரணம் இதுதான் – கே.எல் ராகுல் பேசியது என்ன?

மிட்சல் சான்டனருடன் இணைந்து பந்து வீசியது மிகச் சிறப்பாக இருந்தது. எங்களுடைய பாட்னர்ஷிப் நன்றாக வேலை செய்தது. எம்.எஸ். தோனிக்கு எப்பொழுதுமே தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாக தெரியும். எந்தெந்த பவுலரை எப்போது யூஸ் செய்ய வேண்டும் என்பது குறித்து தோனி நன்கு அறிந்து வைத்திருப்பவர். அதன்படியே இந்த மைதானத்தின் தன்மையை கணித்து பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியதாக மொயின் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement