CSK vs LSG : சி.எஸ்.கே அணிக்கெதிரான இந்த தோல்விக்கு காரணம் இதுதான் – கே.எல் ராகுல் பேசியது என்ன?

KL-Rahul
- Advertisement -

தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

csk vs lsg

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது. பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் தங்களது முதல் வெற்றி பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறியதாவது : டாசுக்கு பிறகு முதல் இரண்டு ஓவர்கள் மைதானத்தில் பந்து கொஞ்சம் நின்று சென்றது. அதோடு பந்தில் சிறிதளவு மூவ்மெண்ட் இருந்தது. ஆனால் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான ஏரியாவில் வந்து வீசவில்லை.

KL Rahul 1

இதன் காரணமாக சென்னை அணி துவக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துவீச்சாளர்கள் சரியான ஏரியாவில் பந்துவீசவில்லை என்றால் இப்படி ரன்கள் கசியத்தான் செய்யும். இதன் மூலம் நாங்கள் சிறிது பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். சென்னை அணையின் துவக்க வீரர்களான கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர்.

- Advertisement -

முதல் ஆறு ஓவர்களில் 70 ரன்களை விட்டுக் கொடுப்பது தவறான ஒன்று. அதேபோன்று நாங்களும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக துவங்கி இருந்தோம். ஆனால் அதனை அப்படியே கொண்டு செல்ல முடியவில்லை. கைல் மேயர்ஸ் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எவ்வாறு ஆடினாரோ அதேபோன்று தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

இதையும் படிங்க : CSKvsLSG : இனிமேலும் இப்படி நடந்தா நான் கேப்டனா இருக்க மாட்டேன். சென்னை வீரர்களை எச்சரித்த – தல தோனி

ஆனாலும் இறுதியில் எங்களால் வெற்றி இலக்கை அடைய முடியாதது சற்று ஏமாற்றம் தான். போட்டியில் கிடைக்கும் சின்ன சின்ன மொமண்டத்தையும் வெற்றிக்காக கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இந்த போட்டியில் அது எங்களால் முடியாமல் போனது. ஆனால் இனிவரும் போட்டிகளில் நிச்சயம் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement