CSKvsLSG : இனிமேலும் இப்படி நடந்தா நான் கேப்டனா இருக்க மாட்டேன். சென்னை வீரர்களை எச்சரித்த – தல தோனி

MS-Dhoni
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது.

ruturaj

- Advertisement -

சென்னை அணி சார்பாக துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் மட்டுமே குவித்ததால் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றினை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசியுள்ள சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : இது ஒரு சிறப்பான போட்டியாக அமைந்தது. நாங்கள் அனைவருமே இந்த விக்கெட் எவ்வாறு செயல்பட போகிறது என்று எதிர்பார்த்து இருந்த வேளையில் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்ததில் மகிழ்ச்சி.

Hangarekar

ஆரம்பத்தில் இந்த மைதானம் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த மைதானத்தில் ரன்களை அதிகமாக குவிக்க முடிந்தது. இப்படி இந்த மைதானத்தில் ரன்கள் வரும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை, மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது. இன்னும் நாங்கள் வேகப்பந்து வீச்சில் முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியம்.

- Advertisement -

சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்து வீச பவுலர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எதிரணியின் பந்துவிச்சாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கவனியுங்கள். இன்னும் ஒரு விஷயத்தை கூறிக் கொள்கிறேன்.

இதையும் படிங்க : IPL 2023: சூரியகுமார், பட்லர் இல்ல – அந்த 4 இந்திய வீரர்களில் ஒருவர் தான் ஆரஞ்சு தொப்பி ஜெய்ப்பாங்க – சேவாக் கணிப்பு

பவுலர்கள் இனியும் தேவையில்லாமல் நோ-பால் மற்றும் அதிக வொயிடுகளை வீசினால் நிச்சயம் அவர்கள் ஒரு புது கேப்டனின் கீழ்தான் விளையாட முடியும். இது என்னுடைய இரண்டாவது வார்னிங் அதன்பின் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகி விடுவேன் என தோனி பவுலர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement