சி.எஸ்.கே எவ்ளோ மொக்கையா இருந்தாலும் அவரு பாத்துப்பாரு.. அவர் ஒருத்தர் போதும் – மெயின் அலி அதிரடி

Moeen-Ali
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 17-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

இந்த தொடரானது சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது 42 வயதை எட்டியுள்ள தோனி விரைவில் ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்த ஆண்டு தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் கேப்டனாகவே அவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சி.எஸ்.கே அணியின் வீரர்களும் முனைப்பு காட்டி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி தோனியை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி எவ்வளவு ஸ்பெஷல் வீரர் என்பது எல்லோருக்குமே தெரியும். அவர் ஒரு ஸ்பெஷல் கேப்டனும் கூட.. அதோடு அவர் ஒரு நல்ல மனிதர் அவருடன் நான் மூன்று சீசன்களில் இணைந்து விளையாடி உள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் அவர் என்ன கொண்டு வரப்போகிறார் என்பது யாருக்குமே தெரியாது.

- Advertisement -

ஆனால் சரியான யுக்திகளை சரியான நேரத்தில் கொண்டு வந்து அணியை வெற்றிபெற வைப்பார். நீங்கள் சிஎஸ்கே அணிக்காக தோனியின் தலைமையின் கீழ் விளையாடும் போது உங்களது அணி மொக்கையாக இருந்தாலும் சரி பலமாக இருந்தாலும் சரி வெற்றிபெற உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த திட்டங்களை தோனி பார்த்துக்கொள்வார்.

இதையும் படிங்க : 200 ரன்ஸ் அடிச்சாலும் அதை மனசுல வெச்சு ஆடுங்க.. ப்ராட்மேன் சொன்ன அறிவுரையை சர்ப்ராஸ்க்கு வழங்கிய கவாஸ்கர்

சிஎஸ்கே அணிக்காக நான் தொடர்ந்து விளையாட ஆசைப்படுகிறேன். அதோடு என்னால் எனது பங்களிப்பை தொடர்ந்து வழங்க முடியும் என்று நம்பும் வரை நான் தொடர்ச்சியாக விளையாட இருக்கிறேன். இம்ரான் தாஹீர், சோயிப் மாலிக் போன்ற வீரர்கள் 40 வயதை கடந்த பின்னரும் இன்றளவும் விளையாடி வருகின்றனர். அதேபோன்று நானும் தொடர்ச்சியாக விளையாடுவேன் என்று மொயின் அலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement