தோனியிடம் இருந்து தான் நான் அந்த வித்தையை கத்துக்கிட்டேன் – மொயின் அலி வெளிப்படை

Moeen Ali
- Advertisement -

இங்கிலாந்து அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான மொயின் அலி கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். அந்த ஆண்டிலிருந்து அவரது அதிரடியான பேட்டிங் மற்றும் சிறப்பான பந்துவீச்சு என சென்னை அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்டு வரும் அவர் இந்த ஆண்டும் சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு சென்னை அணியில் தான் இணைந்ததிலிருந்து தன்னுடைய கிரிக்கெட் அணுகுமுறையே முற்றிலுமாக மாறியுள்ளது என்று அவரே பல்வேறு முறை வெளிப்படையாக தனது கருத்தினை பயந்துள்ளார்.

moeen ali 2

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் மொயின் அலி அதில் சார்ஜா வாரியர்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு டி20 லீக் தொடருக்கான அணியை கேப்டனாக வழி நடத்துவது எவ்வாறு உள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மொயின் அலி கூறுகையில் : நான் ஐபிஎல் தொடரின் போது மகேந்திர சிங் தோனியுடன் அதிக நேரம் உரையாடுவேன். அப்போது அவரிடம் இருந்து கேப்டன்ஷிப் பற்றிய விஷயங்களை நிறைய கேட்பேன் அவரும் சற்றும் யோசிக்காமல் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்.

மற்ற கேப்டன்கள் போல் அல்லாமல் இவர் அணியில் உள்ள அனைவருக்கும் அனைத்து விடயங்களும் தெரிய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். எனவே நான் எவ்வளவு நேரம் அவரிடம் கிரிக்கெட் குறித்த கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாலும் பொறுமையாக என்னிடம் பதில் சொல்வார்.

- Advertisement -

அப்படித்தான் அவரிடம் இருந்து கேப்டன்ஷிப் பற்றிய பல விடயங்களை நான் கற்றுக் கொண்டேன். சென்னை அணியில் இணைந்ததில் இருந்து என்னுடைய கிரிக்கெட்டின் அணுகுமுறையே மாறியுள்ளது. மற்ற அணிகளை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் எப்பொழுதுமே சிஎஸ்கே என்னுடைய குடும்பம் போன்றது.

இதையும் படிங்க : IND vs NZ : கடைசி நேரத்தில் விலகிய ஸ்ரேயாஸ் ஐயர், காரணம் என்ன? பிசிசிஐ அறிவித்த மாற்று வீரர் யார்? விவரம் இதோ

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காகவும் நான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு சென்னை அணி சிறப்பான பல வீரர்களை தேர்வு செய்துள்ளதால் நிச்சயம் இந்த வருடம் சிஎஸ்கே அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் மொயின் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement