IND vs NZ : கடைசி நேரத்தில் விலகிய ஸ்ரேயாஸ் ஐயர், காரணம் என்ன? பிசிசிஐ அறிவித்த மாற்று வீரர் யார்? விவரம் இதோ

Shreyas-iyer
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் களமிறங்கும் இந்தியா முதலாவதாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஹைதராபாத் நகரில் ஜனவரி 18ஆம் தேதியன்று துவங்கும் அத்தொடரில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் அங்கே பயணித்து வலை பயிற்சி ஈடுபட்டு வருகிறார்கள்.

அதில் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அணியாக திகழும் இந்தியா உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை அணி களமிறங்குகிறது. குறிப்பாக சுப்மன் கில், சூரியகுமார் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை கொண்டுள்ள இந்தியாவுக்கு பந்து வீச்சில் பும்ரா, ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் இல்லை என்றாலும் அதை சிராஜ், குல்தீப் யாதவ் போன்ற இதர வீரர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

- Advertisement -

வெளியேறிய ஸ்ரேயாஸ்:
மறுபுறம் அண்டை நாடான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் மண்ணை கவ்வ வைத்து விட்டு வந்துள்ள நியூசிலாந்து கடந்த நவம்பர் மாதம் தங்களது சொந்த மண்ணில் இந்தியாவை 1 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடித்திருந்தது. எனவே அந்த புத்துணர்ச்சியுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வெடுத்தாலும் டாம் லாதம் தலைமையில் டேவோன் கான்வே, கிளன் பிலிப்ஸ் போன்ற தரமான வீரர்களுடன் இத்தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்ல நியூசிலாந்து போராட உள்ளது.

அந்த வகையில் உலகின் டாப் இரு அணிகள் மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இத்தொடரில் கடைசி நேரத்தில் இந்தியாவின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் வெளியேறுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடைசியாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கை எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த அவர் ஹைதராபாத் நகரில் நியூசிலாந்து தொடருக்காக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது முதுகு பகுதியில் காயகத்தை சந்தித்ததாக தெரிய வருகிறது.

- Advertisement -

அதனால் நியூசிலாந்துக்கு எதிரான இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் வெளியேறும் ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று காயத்திலிருந்து குணமடையும் வேலைகளில் ஈடுபடுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதில் இளம் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரஜத் படிடார் இந்திய அணியில் சேர்க்கப்படுவதாகவும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2022 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி எலிமினேட்டர் நாக் அவுட் போட்டியில் மிரட்டலான சதமடித்த அவர் சமீபத்தில் இந்திய அணியில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனாலும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்த அவர் தற்போது மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இப்போதும் முதன்மை வீரர்கள் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான மாற்றியமைக்கப்பட்ட இந்திய அணி பின்வருமாறு:

இதையும் படிங்க: IND vs SL : விராட் கோலி தனது தொடர்நாயகன் விருதினை அவருடன் பகிர்ந்திருக்க வேண்டும் – கம்பீர் கருத்து

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷான் (கீப்பர்), விராட் கோலி, சூரியகுமார் யாதவ், கேஎஸ் பரத் (கீப்பர்), ஹர்டிக் பாண்டியா (துணை கேப்டன்), ரஜத் படிடார், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ்அஹமத், ஷர்துல் தாகூர், யுஸ்வென்ற சஹால், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, முகமத் சிராஜ், உம்ரான் மாலிக்

Advertisement