அவரும் தோனியும் தான் நான் விளையாடியதிலேயே சிறந்த கேப்டன்கள்.. ஓய்வு பெற்ற மொய்ன் அலி பேட்டி

Moeen Ali
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சமீபத்தில் அறிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்காக அறிமுகமான அவர் 2024 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளையாடினார். அந்த வாய்ப்பில் 68 டெஸ்ட், 138 ஒருநாள், 92 டி20 போட்டிகளின் விளையாடிய அவர் முறையே 204, 111, 51 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மேலும் பேட்டிங்கில் மொத்தம் 6678 ரன்களை எடுத்த மொய்ன் அலி 2019 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதே போல 2022 டி20 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் டி20 சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். இருப்பினும் 37 வயதாகும் அவருக்கு அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

சிறந்த கேப்டன்கள்:

அதனால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக மொய்ன் அலி அறிவித்துள்ளார். அதே சமயம் ஐபிஎல் உள்ளிட்ட டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இயன் மோர்கன் தாம் விளையாடியதில் சிறந்த கேப்டன் என்று மொய்ன் அலி பாராட்டியுள்ளார்.

அதை தவிர்த்து இந்தியாவின் எம்எஸ் தோனி தாம் விளையாடிய கேப்டன்களில் சிறந்தவர் என்றும் மொய்ன் அலி கூறியுள்ளார். இது பற்றி இங்கிலாந்து வாரியம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “இயன் மோர்கன் நான் விளையாடியதில் சிறந்த கேப்டன். அதே போல எம்எஸ் தோனியையும் நான் சொல்வேன். கண்டிப்பாக இங்கிலாந்துக்காக மோர்கன் நம்ப முடியாத கேப்டனாகவும் தலைவராகவும் செயல்பட்டார்”

- Advertisement -

ஐபிஎல் எம்எஸ் தோனி:

“ஒரு சிறந்த தலைவரிடம் உள்ள அனைத்து விஷயங்களும் அவர் சாதித்ததற்கு தேவையான பண்புகளும் அவரிடம் இருந்தன. அவரது தலைமையில் விளையாடியது நம்ப முடியாததாக இருந்தது. நீங்கள் அவருக்காக செங்கல் சுவர்கள் வழியாகக் கூட ஓடுவீர்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல இயன் மோர்கன் கேப்டனாக பொறுப்பேற்றதும் மொயின் அலி, ஜோஸ் பட்லர் போன்ற அதிரடி வீரர்களுக்கு வாய்ப்பளித்து இங்கிலாந்து 2019 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: அவமரியாதை செஞ்சுட்டீங்க.. இதுவே இந்தியாவா இருந்தா நொறுக்கிருப்பாங்க.. இங்கிலாந்தை விமர்சித்த மைக்கேல் வாகன்

மறுபுறம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொயின் அலி பெங்களூரு போன்ற மற்ற அணிகளில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்தார். ஆனால் தோனி தலைமையில் சிறப்பாக விளையாடிய அவர் சிஎஸ்கே 2021, 2023 ஐபிஎல் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர். அந்த வகையில் மோர்கன், தோனி ஆகியோர் தாம் கண்ட சிறந்த கேப்டன்கள் என்று மொய்ன் அலி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement