வருண் சக்ரவர்த்தி சிறப்பான லெவலில் முன்னேறிட்டாரு.. அவருக்கு இந்த ஹெல்ப் செய்வதே என் வேலை.. மொய்ன் அலி

Moeen Ali
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கௌகாத்தி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தானை சிறப்பாக பௌலிங் செய்த கொல்கத்தா 151-9 ரன்களுக்கு மடக்கியது. அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 33, ஜெய்ஸ்வால் 29 ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக வைபவ் அரோரா 2, மொய்ன் அலி 2, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 2, ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணிக்கு மொய்ன் அலி 5, கேப்டன் ரஹானே 18 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் நட்சத்திர வீரர் குவிண்டன் டீ காக் 97*, ரகுவன்ஷி 22* ரன்களை எடுத்து 17.3 ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

வருண் – மொய்ன்:

அதன் காரணமாக கொல்கத்தா தங்களது முதல் வெற்றியைப் பெற்று அசத்தியது. முன்னதாக இந்த வருடம் கொல்கத்தா அணிக்காக முதல் முறையாக இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி விளையாடுகிறார். கடந்த வருடங்களில் சென்னை அணிக்காக விளையாடி வந்த அவர் இம்முறை கொல்கத்தா அணிக்காக இந்தப் போட்டியில் சுனில் நரைனுக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வாய்ப்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியுடன் ஜோடி சேர்ந்து பவுலிங் செய்த அவர் ராஜஸ்தானை திணறடித்து 4 ஓவரில் 5.80 எக்கனாமியில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மறுபுறம் சக்கரவர்த்தி 4 ஓவரில் 4.20 எக்கனாமியில் 2 விக்கெட்டுகளை எடுத்த வருண் அவரை விட சிறப்பாக பவுலிங் செய்தார். இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி தற்போது சிறப்பான முன்னேற்றத்தை சந்தித்துள்ளதாக மொய்ன் அலி பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மொய்ன் பாராட்டு:

அவருக்கு உதவி செய்யும் வகையில் பவுலிங் செய்வதே தமது வேலை என்றும் மொய்ன் அலி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னை விட சிறப்பாக பவுலிங் செய்யக்கூடிய மிஸ்ட்ரி ஸ்பின்னருடன் விளையாடிப் பழகி விட்டேன். முடிந்தளவுக்கு மிகவும் துல்லியமாக பௌலிங் செய்து பேட்ஸ்மேன்களின் மீது அழுத்தத்தை உண்டாக்க வேண்டும் என்பதே எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலை”

இதையும் படிங்க: ஆர்சிபி அட்ஜெஸ்ட் பண்ணாலும்.. அதை வெச்சு உருவாக்கப்பட்ட சிஎஸ்கேவை சாய்க்க முடியாது.. வாட்சன் பேட்டி

“அதைப் பயன்படுத்தி எதிர்புறம் வருண் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். அவர் அதை சிறப்பாக செய்கிறார். ஒரு சிறந்த பவுலரான அவர் கடந்த 2 – 3 வருடங்களில் நிறைய மேம்பட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒருவருடன் சேர்ந்து பந்து வீசுவது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்ட வருண் அதே துபாயில் இந்தியா 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல உதவும் அளவுக்கு முன்னேற்றத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement